தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று (வெவ்வாய்கிழமை) முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்கள் ( நவம்பர் 4) வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெற்று வருகிறது. சில பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 1) 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
இந்த மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil