தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 3100 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“