scorecardresearch

சென்னை, காஞ்சிபுரம்… இந்த 16 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
சேலம், திருப்பத்தூர், வேலூர் உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு காற்றும்,  மேற்கு திசை காற்றும் சந்திப்பதால், தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடி  மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி , காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கனியாகுமரி , புதுச்சேரில் உள்ள மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rain in 16 districts with in 3 hours meteorological department