தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, நன்றாக பெய்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காகங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டி அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“