தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. ஹீட் ஸ்டோக்கால் சென்னையில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாட்டிலும், சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் நாளையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மறுதினமும் கனழமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.