தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று (டிச.8) இரவில் இருந்து அதிகாலை வரை கோவை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மாநகர பகுதியான செல்வபுரம், சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை பகுதிகளில் அடை மழை பெய்தது. மழை காரணமாக இரவு நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. தொடர்ந்து ராமநாதபுரம், செல்வபுரம் பகுதியில் மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது.
/indian-express-tamil/media/media_files/3wdaT4KVbgOspeo1gYSB.jpeg)
மேம்பால பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவிநாசி சாலை மேம்பாலம் பகுதியில் முழுமையாக மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/F97KejfzuC3gwtO71W6r.jpeg)
தொடர்ந்து மழைநீர் அகற்றும் பணியில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/1tmekWQdq1MQ45e0MxWt.jpeg)
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“