தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் கோவையில் நேற்று மாலை முதல் விடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தொண்டாமுத்தூர், வடவள்ளி, நரசிபுரம் உள்ளிட்ட மலையோர பகுதியில் கனமழை பெய்தது. தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் புது காலனி பகுதியில் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. சுமார் 26 வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். அட்டுக்கல் மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றிக்கு செல்லும் நீர், புது காலனி பகுதிக்குள் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இது குறித்து பேரூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டாட்சியர் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இரவு முழுவதும் மழை பெய்தது. இன்று காலை மோட்டார் பம்பு மூலம் வெள்ளை நீர் வெளியேற்றப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ஆட்டுக்கல் மலைப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை