நெல்லை உட்பட 4 தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘என் கிட்ட தான் ஏதோ பிரச்னை போல’ கதறி அழுத அனிதா
தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மசாலா பூரி: குழந்தைகள் ரொம்ப விரும்புற மாதிரி செய்யலாம்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக விட்டு விட்டு மழை பெய்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. இதனால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”