விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கோடை மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவாகி உள்ளது. 12 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை ஐந்து மணி முதல் குளிர்ந்த காற்று வீசு துவங்கியது. இன்று காலை நடை பயிற்சி சென்றவர்கள் இதை முழுமையாக அனுபவித்தனர். கடந்த 4 தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி இன்று 8ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மாவட்டத்தில் 100 டிகிரி-க்கும் மேல் வெப்ப நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இன்று அந்த சூழ்நிலை மாறி விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் குளிர்ந்த காற்றுடன் 45 நிமிடம் மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது . 45 நிமிடம் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோன்று கடலூர் மாவட்டத்திலும் 45 நிமிடம் ஏழு மணிக்கு துவங்கிய மழை 7:45 வரை இன்று நிதானமாக பெய்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஓரளவுக்கு தூரல் மட்டுமே இருந்தது. மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“