scorecardresearch

சென்னையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது?

இந்த மாதம் கடைசியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் மழை பெய்யலாம் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மழை

இந்த மாதம் கடைசியில் அல்லது மே மாதத்தின் முதல் வாரத்தில் மழை பெய்யலாம் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில்,  38.1 டிகிரி செல்ஷியஸும்,  மீனம்பாக்கத்தில் 39.7 டிகிரி செல்ஷியஸும் பதிவாகி உள்ளது. வழக்கத்தைவிட 4 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு வெதர்மான் கூறுகையில், இந்த மாதம் கடைசி வாரத்தில் சென்னையில் மழை பெய்யும் என்று கூறியுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி, ஏப்ரல் 24ம் தேதிக்குள் இடியுடன் கூடிய மழை சில இடங்களில் பெய்யக்கூடும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்டமாக 37 முதல் 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை பதிவாகும். குறைந்த பட்சமாக 27 முதல் 28 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோல ஏப்ரல் 22 முதல் 24 வரை இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையானது அதிகாலை மற்றும் மதியத்திற்கு பிறகு  பெய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rain may hit chennai this last week and weather forecast

Best of Express