/tamil-ie/media/media_files/uploads/2022/04/chennai-rains-759.jpg)
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 3,460 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1,500 கன அடியாகவும் இருக்கிறது. நீர் இருப்பு 72.01 டிஎம்சியாக உள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தங்கம் விலை நிலவரம்
சென்னையில் 24 கேரட் கிராம் தங்கம் ரூ.5395 க்கு விற்பனை செய்யப்படுகிறு. கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது. நேற்று ரூ.5,416 க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரன் தங்கம் ரூ.43,160 க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,945 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.
சவரன் தங்கம் ரூ.39,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.160 குறைந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.39,720 ஆக இருந்தது.
டீ விற்றதை நம்பியவர்கள், ஏன் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்பவில்லை – பிரகாஷ் ராஜ் கேள்வி
பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 18வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.