/indian-express-tamil/media/media_files/2025/08/22/sri-lanka-ex-president-ranil-wickremesinghe-arrested-2025-08-22-14-14-17.jpg)
Today Latest News Live Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 22, 2025 15:18 IST
உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி அதிகரிப்பு
முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் விபத்து மரண இழப்பீடு ₹2 லட்சமாகவும், இயற்கை மரண நிதியுதவியும் ₹30,000 ஆகவும் உயர்த்தி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
விபத்தில் ஏற்படும் உறுப்பு செயலிழப்புக்கான நிதியுதவி ₹1 லட்சமாகவும், இறுதிச் சடங்கு செலவின் நிதி ₹10,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- Aug 22, 2025 15:17 IST
குடியரசுத் தலைவருடன் சுபான்ஷு சுக்லா
டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து,விண்வெளியில் தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா
- Aug 22, 2025 14:34 IST
தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் என தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- Aug 22, 2025 14:33 IST
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி,
விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. - Aug 22, 2025 14:18 IST
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி முறைகேடு விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கேவை குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சொந்த வேலையாக இங்கிலாந்து சென்றபோது சொந்த செலவுக்காக ரூ.1.69 கோடி அரசுப் பணத்தை பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்கே மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- Aug 22, 2025 13:48 IST
கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பக்தர்கள் வசதிக்காக ரூ.64.30 கோடி மதிப்பில் தங்கும் விடுதி, ரூ.2.82 கோடி மதிப்பில் காத்திருப்புக் கூடம் மற்றும் ரூ.1.17 கோடியில் சொற்பொழிவு அரங்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- Aug 22, 2025 13:42 IST
விநாயகர் சதுர்த்தி - 380 கணபதி ரயில்கள் இயக்கம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. கணபதி சிறப்பு ரயில்கள் கடந்த 11ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன கடந்த 2023ம் ஆண்டில் மொத்தம் 305 கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன" என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Aug 22, 2025 13:40 IST
`கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் - கதறி அழுத பிரேமலதா
34 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் வடிவில் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட `கேப்டன் பிரபாகரன்' திரையில் விஜயகாந்த் தோன்றியபோது கதறி அழுத பிரேமலதா விஜயகாந்த்
- Aug 22, 2025 13:39 IST
தொகுதி மறு சீரமைப்பு - அமித்ஷா திட்டவட்டம்
தொகுதி மறு சீரமைப்பு, தென் மாநிலங்களுக்கோ, வாக்காளர்களுக்கோ அநீதி நடக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- Aug 22, 2025 13:36 IST
தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு: ராகுல் காந்தி வரவேற்பு
தெருநாய்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வரவேற்கிறேன். இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும், அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுளளார்.
- Aug 22, 2025 13:02 IST
மல்லை சத்யா விளக்கம் அளிக்க நோட்டீஸ்
மதிமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மல்லை சத்யாவுக்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்க நோட்டீஸ். 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வ பதில் அனுப்பாவிட்டால், கட்சி விதிகளின்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
- Aug 22, 2025 12:34 IST
ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு பாமகவில் பதவி
பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 21 பேர் கொண்ட பாமக தலைமை நிர்வாக குழுவில் ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி இடம்பெற்றுள்ளார்.
- Aug 22, 2025 12:31 IST
"பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா?" - நடிகர் சரத்குமார்
"தவெக தலைவர் விஜய்க்கு பாசிசம் என்றால் என்னவென்று தெரியுமா? மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை" என்று நடிகர் சரத்குமார் கருது தெரிவித்துள்ளார்.
- Aug 22, 2025 12:23 IST
தூய்மை காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு - ஊரக வளர்ச்சித்துறை உத்தரவு
தூய்மை காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
- Aug 22, 2025 12:17 IST
எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் அவசர ஊர்தி தொழிலாளர்கள் சங்கம் புகார்
எடப்பாடி பழனிசாமி மீது டிஜிபியிடம் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அச்சுறுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- Aug 22, 2025 11:45 IST
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு பயணம் ரத்து
பிரதமர் நரேந்திர மோடி வரும் 26ம் தேதி தமிழ்நாடு வருவதாக இருந்த நிலையில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 26இல் சிதம்பரம் கோயிலில் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
- Aug 22, 2025 11:43 IST
"கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அதீத ஆசை" - விஜய்க்கு செம்மலை பதிலடி
"கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரம் ஆகிவிடாது, கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது அதீத ஆசை. அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற ஆளுமை மிக்க தலைவர்களோடு விஜய் தன்னை ஒப்பிடுவதை ஏற்க இயலாது. அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது!" என்று தவெக தலைவர் விஜய்க்கு அதிமுகவின் செம்மலை பதிலளித்தியூள்ளர்.
- Aug 22, 2025 11:37 IST
அனிருத் நிகழ்ச்சிக்கு தடைகோரி மனு
கூவத்தூரில் நாளை(ஆக.23) நடைபெற உள்ள அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு. மாவட்ட ஆட்சியர் அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு; இன்று பிற்பகல் 2.15 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 22, 2025 11:36 IST
தெருநாய் விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
தெருநாய்களை காப்பகத்திற்கு அனுப்பும் உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்றும், வெறிநாய், கடிக்க முற்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி பாதுகாக்க வேண்டும், ரேபிஸ் பாதித்த நாய்களை விடுவிக்கக் கூடாது. இடையீட்டு மனு தாக்கல் செய்யும் நாய் ஆர்வலர்கள் ரூ.25 ஆயிரம், என்.ஜி.ஓ-க்கள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் உருவாக்க வேண்டும். அனைத்து உயர்நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியம் உத்தரவிட்டுள்ளது.
- Aug 22, 2025 11:33 IST
தெருநாய் விவகாரம் - உச்சநீதிமன்றம் தடை
"டெல்லியில் பொதுஇடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்படுகிறது. தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். வேறு இடங்களில் உணவு அளிப்போர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம். தெருநாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக்கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும்." என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- Aug 22, 2025 11:33 IST
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது : உச்ச நீதிமன்றம்
தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவளிப்பதற்கென தனி இடத்தை அமைக்க வேண்டும் என்றும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து உயர் நீதிமன்றங்களில் தெரு நாய்கள் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Aug 22, 2025 11:28 IST
நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்
நாடாளுமன்ற வளாகத்திற்குள் இன்று காலை 6.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் மர்ம நபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
- Aug 22, 2025 11:17 IST
தெருநாய்களை காப்பகத்துக்கு அனுப்ப தடை - சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு
வெறித்தனமான நாய்கள், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை தவிர மற்ற நாய்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிடித்துச் செல்லப்பட்ட நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு விடுவிக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு வழங்கி உள்ளது.
- Aug 22, 2025 11:16 IST
சொகுசு விடுதிக்குள் அடைக்கப்பட்ட கூலி தொழிலாளி மீட்பு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் சொகுசு விடுதிக்குள் 6 நாட்களாக அடைத்து வைக்கப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வெள்ளையன் என்பவரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 நாட்களாக அவரை துன்புறுத்தி உணவு, தண்ணீர் எதுவும் வழங்காமல் அடைத்து வைத்திருந்த விடுதி உரிமையாளர் தலைமறைவு. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர்.
- Aug 22, 2025 10:56 IST
வாகன ஓட்டிகளுக்கு 50% தள்ளுபடி - பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதங்களை செலுத்த, வாகன ஓட்டிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை பெங்களூரு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இந்த தள்ளுபடி நாளை முதல் செப்டம்பர் 12 வரை பாதி கட்டணம் செலுத்தலாம்.
- Aug 22, 2025 09:38 IST
சென்னை டே - ஸ்டாலின் வாழ்த்து
சென்னை எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்தது. சென்னை பல பெண்களுக்கு பறக்க சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்தது. சென்னை சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386 ஆகும். சென்னை டே; சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்.
- Aug 22, 2025 09:14 IST
ராகுல் மீது பிரதமர் விமர்சனம்
காங்கிரசில் திறமையான இளம் தலைவர்களால் ராகுல்காந்தி பாதுகாப்பற்றதாகவும், பதற்றமாகவும் உணருகிறார். முக்கிய சட்ட மசோதா மீதான விவாதங்களில் இருந்து எதிர்க்கட்சிகள் விலகி இருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
- Aug 22, 2025 09:10 IST
ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி எனினும், அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.
- Aug 22, 2025 09:10 IST
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆடி மாதம் பக்தர்கள் காணிக்கை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாதம் வருகை தந்த பக்தர்கள் சுமார் ரூ.1.30 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 174 கிராம் தங்கம் மற்றும் 1.36 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
- Aug 22, 2025 09:09 IST
சென்னையில் வெறிச்சோடிய வாரச்சந்தை
சென்னை பல்லாவரத்தில் கனமழை பெய்ததால் வாரச்சந்தை வெளிச்சோடி காணப்படுகிறது. வணிகர்கள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- Aug 22, 2025 08:44 IST
மதுரையில் ஆர்.பி. உதயகுமார் பேட்டி
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
- Aug 22, 2025 08:41 IST
அவர் எங்களுக்கு தம்பி - பிரேமலதா விஜயகாந்த்
விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் அவர் எங்களுக்கு தம்பி, அரசியலுக்கு வந்ததற்கு பிறகு வந்ததல்ல இந்த அண்ணன் தம்பி உறவு, கேப்டன் விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது இந்த உறவு என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
- Aug 22, 2025 08:20 IST
141 தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்புகள்
இலங்கையின் செம்மணி புதைகுழியில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் வருகின்றன. இதுவரை 141 பேரின் மனித எலும்புக்கூடுகளுடன், குழந்தைகளின் பால் பாட்டில், விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்டவையும் தோண்டி எடுக்கப்பட்டது.
- Aug 22, 2025 08:02 IST
ரேபிடோ'வுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
தவறான விளம்பரம் செய்ததற்காக `ரேபிடோ'வுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வெறும் 5 நிமிடத்தில் சவாரிக்கு ஆட்டோ கிடைக்காவிட்டால் ரூ.50 வழங்கப்படும் என தவறான உத்தரவாதம் அளித்து விளம்பரம் வெளியிட்ட ரேபிடோவை கண்டித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
- Aug 22, 2025 07:36 IST
சென்னையில் இடி, மின்னலுடன் மழை
சென்னையில் தரமணி, பெருங்குடி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
- Aug 22, 2025 07:35 IST
நெல்லை வரும் அமித்ஷா
நெல்லை தச்சநல்லூரில் இன்று நடைபெற உள்ள பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். அவர் வருகையை ஒட்டி, நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. மேலும் நகரப்பகுதிக்குள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Aug 22, 2025 07:33 IST
5%, 18% கொண்ட இரு அடுக்குகளாக ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்!
ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள 2 அடுக்கு ஜி.எஸ்.டி வரி முறையை ஏற்க மாநில அமைச்சர்கள் குழு ஒப்புதல். குறைந்தபட்சம் 5% அதிகபட்சம் 18% கொண்ட இரு அடுக்குகளாக ஜி.எஸ்.டி சீர்திருத்தம். ஜி.எஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் தரும்பட்சத்தில் பல்வேறு பொருட்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
- Aug 22, 2025 07:30 IST
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.