Coimbatore, Madurai, Trichy News: 66 அடியை எட்டிய வைகை அணை - வெள்ள அபாய எச்சரிக்கை

Coimbatore, Madurai, Trichy News Live 18 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Coimbatore, Madurai, Trichy News Live 18 October 2025: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vaigai dam 2

66 அடியை எட்டிய வைகை அணை - வெள்ள அபாய எச்சரிக்கை

Today Latest News Updates: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை அடுத்து, அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதனால் வருகிற 23-ம் தேதி வரை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில்  வரும் 20, 22, 23 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 21-ம் தேதி சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Advertisment

கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் இரவு பெய்த கனமழையால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Oct 18, 2025 21:02 IST

    66 அடியை எட்டிய வைகை - வெள்ள அபாய எச்சரிக்கை

    தொடர் நீர்வரத்து காரணமாக 12 மணிநேரத்தில் 4 அடி உயர்ந்து வைகை அணையின் நீர்மட்டம்  66 அடியை எட்டியது. இதனால், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 20:16 IST

    27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

     27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 18, 2025 20:09 IST

    தீபாவளி ஷாப்பிங் - திருப்பூரில் கூட்ட நெரிசல்

    திருப்பூரில் தீபாவளிக்கு புத்தாடை மற்றும் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால், திருப்பூர் புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை உள்ளிட்ட கடை வீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 



  • Oct 18, 2025 19:53 IST

    குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - ஜேசிபி மூலம் மக்கள் மீட்பு

    தேனி முல்லைப் பெரியாற்று நீர் தேனி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாக வெளியேறியவர்கள் போக, மீதம் உள்ளவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.



  • Oct 18, 2025 19:52 IST

    தீபாவளி சீட்டு மோசடி - பாதிக்கப்பட்டோர் புகார்

    திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரதி நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தீபாவளி சீட்டு கட்டி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.



  • Oct 18, 2025 18:51 IST

    கனமழையால் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

    திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் குறிச்சி பாண்டியாபுரம் பகுதியில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே படுத்திருந்த மாடத்தி அம்மாள் (70) என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.



  • Oct 18, 2025 18:14 IST

    மலை ரயில் பாதையில் மண் சரிவு

    நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலை ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்தடைந்தது.



  • Oct 18, 2025 18:14 IST

    அன்புமணி ஆதரவாளர்கள் புகார்

    மருத்துவர் ராமதாஸ் பாமகவின் இளைஞர் அணித் தலைவர் என நியமனம் செய்யப்பட்ட தமிழ் குமரன், பாமகவின் கொடி, பெயரை பயன்படுத்தக் கூடாது என தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் புகார் அளித்தனர்.



  • Oct 18, 2025 18:10 IST

    கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

    கரூரில், திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட  குழாயில் உடைப்பு ஏற்பட்டதால்  குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்  வீணாகியது. இதனால் வெள்ளியணை கடைவீதியில் உள்ள பொதுமக்கள்,  பாதசாரிகள் வாகன ஓட்டிகள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக அவதிப்பட்டனர்.



  • Oct 18, 2025 17:23 IST

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் வாகன நெரிசல்

    தீபாவளி பண்டிகைக்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களால், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடுமையான வாகனப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதால், டோல்கேட் முழுவதும் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. இன்று மற்றும் நாளை (தீபாவளியை ஒட்டி) போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.



  • Oct 18, 2025 16:48 IST

    உத்தமபாளையம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. .இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், பொதுமக்கள் வீட்டை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர்.



  • Oct 18, 2025 16:29 IST

    தேனியில் வெள்ளப்பெருக்கு! வைகை அணை முழு கொள்ளளவை எட்டுகிறது!

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால், போடி அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

    தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு ஆகிய மூன்று முக்கிய ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வைகை அணை நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று இரவு அல்லது நாளைக்குள் வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Oct 18, 2025 13:06 IST

    குவியல் குவியலாக முளைக்கும் நெல்மணிகள் - விவசாயிகள் வேதனை

    மன்னார்குடி அருகே அரசு நேரடி கொள்முதல் மையத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கொண்டுவந்த நெல்மணிகள் குவியல் குவியலாக முளைக்க தொடங்கின. ஓவேல்குடியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் மையத்தில் ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மன்னார்குடி, திருவாரூர் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் உள்ளன; இதனால் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 



  • Oct 18, 2025 12:29 IST

    அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவு ரத்து

    அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் வழங்க யூடியூபர் மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட். மான நஷ்டஈடு கோரி அப்சரா ரெட்டி தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Oct 18, 2025 12:03 IST

    தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உப்பாற்று ஓடை நீர்வழிப் பகுதியில் பெய்து வரும் மழையால் கோரம்பள்ளம் குளத்துக்கு 1000 கனஅடி நீர்வரத்து. கோரம்பள்ளம் குளத்திலிருந்து 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 12:03 IST

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது: கோவில் நிர்வாகம்

    தீபாவளியன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசுகள் வெடிக்க கூடாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை, ஆவணி மூல வீதிகளில் தீப்பற்றக்கூடிய வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 12:02 IST

    பெரியார் உலகம் - திமுக சார்பில் ரூ.1.70 கோடி நிதி

    திருச்சி சிறுகனூரில் 'பெரியார் உலகம்' பணிக்காக திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் வழங்கப்பட்டது. தி.க. தலைவர் வீரமணியை பெரியார் திடலில் சந்தித்து ரூ.1.70 கோடிக்கான காசோலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்; பெரியாரின் சிந்தனைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் பெரியார் உலகம் அமைக்கப்படுகிறது



  • Oct 18, 2025 10:47 IST

    தீபாவளி பண்டிகை - தென்மாவட்டத்தை நோக்கி படையெடுக்கும் மக்கள்

    தீபாவளியை முன்னிட்டு தென் மாவட்டங்கள் நோக்கி பொதுமக்கள் செல்லும் நிலையில், நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 10 மணி வரை 23,500 வாகனங்கள் உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியை கடந்து சென்றுள்ளது.



  • Oct 18, 2025 08:59 IST

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை - மண் சரிவால் வீடு சேதம்

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீடு சேதமடைந்தது. மண்சரிவால் குன்னூர் - காந்திபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வீடு சேதமானது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காந்திபுரம் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டுமானப்பணி நடப்பதால் மண்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்தது.

     

     



  • Oct 18, 2025 08:58 IST

    கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

    தேனி மாவட்டம் சுருளி வனப்பகுதியில் இரவு பெய்த கனமழையால் அருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவியில் குளிப்பதற்கான தடை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tamil News Live Update Live Updates Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: