அடுத்த 24 மணி நேர வானிலை அப்டேட் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் பேட்டி அளித்துள்ளார்.
அதன்படி, "கடந்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. இதேபோல பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பை பொருத்தவரை தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் தமிழக கடலோரப் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு நோக்கிய நகர்வின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் நாளை நல்ல மழை பெய்யும்.
அதே போல தென்மாவட்டம் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் விருதுநகர் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்புள்ளது.
12 மற்றும்13 தேதிகளுக்கு பிறகு வெப்பம் இரண்டு முதல் மூன்று டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகள், குமரி பகுதிகள், தெற்கு கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அதனை ஒட்டி பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன" என்றார்.