Chennai News Live Updates: 2-வது நாளாக சென்னையில் போராட்டம் - போக்குவரத்து ஊழியர்கள் கைது

Tamil Nadu Latest Live News Update in Tamil 19 august 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu Latest Live News Update in Tamil 19 august 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ard

Today Latest Live News Update in Tamil 19 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 19, 2025 14:25 IST

    2-வது நாளாக சென்னையில் போராட்டம் - போக்குவரத்து ஊழியர்கள் கைது

    போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Aug 19, 2025 14:22 IST

    கிட்னி விற்பனை விவகாரம்: மக்களின் உரிமையை பாதுகாக்க அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

    சட்டவிரோத கிட்னி விற்பனை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாணையில்,கிட்னி மற்றும் உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், ஏழை, எளிய மக்கள் உயிர் வாழும் உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என அறிவுறுத்தியுள்ளனர்.



  • Advertisment
  • Aug 19, 2025 13:27 IST

    எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன் பதிலடி

    வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடந்த அதிமுக பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில், “எடப்பாடி பழனிசாமி இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.



  • Aug 19, 2025 13:21 IST

    காட்சிகள் நீக்க விவகாரம் - மனுஷி படத்தை பார்க்கும் நீதிபதி

    மனுஷி படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுஷி படத்தை ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பார்வையிட உள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Aug 19, 2025 13:18 IST

    குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு

    துணைக்குடியரசு தலைவர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.டி.ஏ கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.



  • Aug 19, 2025 12:56 IST

    ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், செயலற்ற நிலையில் உள்ளது: ஒன்றிய அரசு

    ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 56.04 கோடி வங்கிக் கணக்குகளில் 23% கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2.75 கோடி, பீகாரில் 1.39 கோடி என நாடு முழுவதும் 13.04 கோடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 19, 2025 12:51 IST

    டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

    டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ரேணுகா தேவி உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தி வருகிறார்.



  • Aug 19, 2025 12:38 IST

    அமித்ஷா பங்கேற்றும் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல் - நெல்லை மாநகர காவல் துறை

    நெல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றும் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது தவறான தகவல்; பேனர் வைப்பதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது என்று பூத் கமிட்டி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக கூறி பாஜக நாளை கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் நெல்லை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. 



  • Aug 19, 2025 12:36 IST

    "முன்னாள் முதல்வர், மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீக செயல்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    "ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு, தான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாக சொல்கிறார் இபிஎஸ். 'அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய்' என்பதுபோல, ஆம்புலன்ஸை பார்த்தாலே அவருக்கு வேறு ஏதோ ஞாபகம் வருகிறதுபோல. ஒரு முன்னாள் முதல்வர், மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரீக செயல்” என்று தனது கூட்டங்களுக்கு இடையே வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் விடப்படுவதாக எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். 



  • Aug 19, 2025 12:00 IST

    எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை பகல் 12 மணி வரைக்கும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.



  • Aug 19, 2025 11:53 IST

    தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆலோசனை

    அன்புமணி விவகாரம் குறித்து விவாதிக்க தைலாபுரத்தில் பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.



  • Aug 19, 2025 11:52 IST

    45 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறைக்கு தேர்வானவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்.



  • Aug 19, 2025 11:51 IST

    திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) காலமானார்.

    திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) காலமானார். உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



  • Aug 19, 2025 11:50 IST

    எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை!

    அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த மனுவை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. 



  • Aug 19, 2025 11:48 IST

    கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டம்: தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு

    கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,442 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. 



  • Aug 19, 2025 11:20 IST

    தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவி மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல் 

    தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.



  • Aug 19, 2025 11:11 IST

    என்.டி.ஏ கூட்டணி எம்.பி-க்கள் கூட்டம் தொடக்கம்

    பிரதமர் மோடி, இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். எம்.பி-க்களிடம் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை மோடி அறிமுகம் செய்துள்ளார்.



  • Aug 19, 2025 11:09 IST

    காக்கும் கரங்கள் திட்டம் - தொடங்கி வைத்த ஸ்டாலின் 

    முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தை தொடங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 



  • Aug 19, 2025 10:30 IST

    பருத்தி மீதான இறக்குமதி வரி 11% ரத்து - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

    பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% இறக்குமதி வரிக்குக் கூடுதலாக, மேலும் 25% வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவின் மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயரும் நிலை ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களுக்கு 50% வரி விதித்ததால் ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொழிலாளர் பற்றாக்குறையால் இந்தியாவில் ஆடை உற்பத்தி குறைந்த நிலையில் டிரம்ப் வரியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தனர். இதனிடையே பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆக.19 முதல் செப். 30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது.



  • Aug 19, 2025 09:59 IST

    தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைவு!

    தங்கம்விலைசவரனுக்குரூ.320 குறைந்துகிராமுக்குரூ.40 குறைந்துள்ளது. ஒருசவரன்ரூ.73,880க்குவிற்பனையாகிறது.

     



  • Aug 19, 2025 09:41 IST

    சன்னிதானத்தில் காலணியுடன் நின்ற போலீஸ்

     சபரிமலை சன்னிதான பகுதியில் காலணியுடன் நின்ற காவல்துறை அதிகாரி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு முகாம் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.



  • Aug 19, 2025 09:12 IST

    ராமதாஸ் - அன்புமணி சண்டை நாடகம் - காடுவெட்டி குருவின் மகள்

    பா.ம.க.வில் இருவர​து சண்டையால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது, அரசியலுக்காக வேண்டுமென்றே நாடகம் ஆடுகின்றனர் என்று காடுவெட்டி குருவின் மகள் தெரிவித்துள்ளார்.



  • Aug 19, 2025 09:10 IST

    அதிமுக சார்பில் எல்.இ.டி பேரணி துவக்கம்

    ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வரும் 20ம் தேதி `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை  அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி வாகன இருசக்கர பேரணியை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்தார்.



  • Aug 19, 2025 09:08 IST

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

    அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Aug 19, 2025 09:06 IST

    சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கியதால் 4 வயது குழந்தை உயிரிழப்பு

    திருவள்ளூர் மாவட்டம் பி.ஆர். பள்ளி கிராமத்தில் சுவாசக்குழாயில் மாத்திரை சிக்கியதால் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தைகளுக்கு மாத்திரையை அப்படியே கொடுக்காமல பொடியாக மாற்றி குழைத்து கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.



  • Aug 19, 2025 08:32 IST

    ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய இபிஎஸ்

    வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற சுற்றுப்பயண கூட்டத்திற்கு நடுவே சென்ற ஆம்புலன்சால் டென்ஷனான இபிஎஸ். நோயாளி இன்றி வேண்டும் என்றே ஆம்புலன்ஸை கூட்டத்திற்கு நடுவே இயக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். சுமார் 30-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இதுபோன்று நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஓட்டுநர் நோயாளி ஆவார் என இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • Aug 19, 2025 08:31 IST

    2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி - எலும்பு கூடாக கண்டெடுப்பு

    குமரி ஆரல்வாய்மொழி அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி ராஜலிங்கம்(38) சீதப்பால் மலை உச்சியில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். எலும்பு கூடை மருத்துவ ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Aug 19, 2025 08:29 IST

    உக்ரைனில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

    அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்த சூழலிலும், உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. கார்கிவ் குடியிருப்பு பகுதியில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



  • Aug 19, 2025 08:28 IST

    ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்

    சென்னை, பல்லாவரத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக கே.டி.எம் பைக்கில் அதி வேகமாக சென்ற 17-வயது சிறுவன் மற்றொரு பைக் மீது மோதி ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாப பலியானார்.



  • Aug 19, 2025 08:05 IST

    செய்தியாளரை கமெண்ட் அடித்த டிரம்ப்

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்கள் சூட் அருமையாக உள்ளது என்று சொன்ன செய்தியாளர். கடந்த முறை உங்களிடம் ஒரு சூட் கூட இல்லையா என்று கேட்ட அதே ரிப்போர்ட்டர் தான் இவர் என கமெண்ட் அடித்த டிரம்ப். நான் சூட்டை மாற்றிவிட்டேன். நீங்கள் அதே சூட்டில் தான் இருக்கிறீர்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.



  • Aug 19, 2025 08:03 IST

    போர் நிறுத்தம் - இத்தாலிய பிரதமர் வேண்டுகோள்

    3 ஆண்டுகள் ரஷ்யா தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் இது ஒரு முன்னேற்றம். நாம் அமைதியை விரும்பினால், நீதியை உறுதி செய்ய விரும்பினால் இந்த போர் நிறுத்த முடிவில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.



  • Aug 19, 2025 07:45 IST

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் - ராகுல்காந்தி

    தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத்திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் எடுப்போம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.



  • Aug 19, 2025 07:24 IST

    புதிய ஜி.எஸ்.டி விகிதம் - பிரதமர் ஆலோசனை

    விரைவில் அறிவிக்கப்பட உள்ள புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள், பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்த செயல்திட்டம் குறித்து விவாதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.



  • Aug 19, 2025 07:22 IST

    நூலிழையில் உயிர் தப்பிய நபர்

    கேரளாவில் சாலையில் பள்ளம் இருந்ததால் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருசக்கரவாகன ஓட்டி, சிறு காயத்துடன் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. சாலை மோசமான நிலையில் உள்ளதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



  • Aug 19, 2025 07:21 IST

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

    குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித்தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான இறுதி அதிகாரம் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

     



  • Aug 19, 2025 07:19 IST

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 78,000 கன அடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50,000 கன அடியில் இருந்து 78,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Aug 19, 2025 07:17 IST

    வெள்ளை மாளிகையில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு

    இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை, இதுபோன்று இனி ஒரு போர் நடக்க கூடாது இன்னும் சற்று நேரத்தில் புதினுடன் பேச உள்ளேன், புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



Tamil News Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: