சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 முதல் 25 செ.மீ மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது : ” நேற்று காற்றழுத்த மண்டலமாக இருந்தபோது சுமார் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்தது. இன்று காலை 5.30 மணிக்கு புயலாக மாறியது. புயலாக மாறிய பின்னர் 5 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கி உள்ளது. 100 கிலோமீட்டர் வரைதான் கடலில் நகரப்போகிறது. இது நகர்வதற்கு 18 மணி நேரம் தேவைப்படும். 20 மணி நேரத்திற்கு பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது போன்று 2015 நடந்திருக்கிறது. 1996 ஜூன் மாதத்தில் நடந்துள்ளது. அப்போது 31 செண்டி மீட்டர் மழை பெய்தது.
தற்போது கரு மேகங்கள் கடற்கரையையொட்டி இப்போதுதான் வந்துள்ளது. இன்று மதியத்தில் இருந்து நாளை மதியம் வரை ஒரு சில இடங்களில் 20 முதல் 25 செ.மீ மழை பெய்யலாம். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சில இடங்களில் 20 முதல் 25 செ.மீ மழை பெய்யலாம். ராணிபேட்டை, வேலூர் வரை 7 முதல் 12 செ.மீ மழை பெய்யலாம். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகாலை பல மடங்கு உறுதிபடுத்தி உள்ளது, என்பதால் மழை நீர் வடிவடதற்கு 3 மணி நேரம் கிடைத்தால், வெள்ளம் ஏற்படாது. அடுத்த மூன்று நாட்களில் அதிக செ.மீ மழை பெய்யலாம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“