தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் கடலூர் மற்றும் விழுப்புரத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை என்பதை தெரிந்துகொள்வோம்.
செங்கல்பட்டு, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நாகப்பட்டினத்தில் 167 மில்லி மீட்டர், காரைக்காலில் 122 மில்லி மீட்டர், புதுச்சேரி 96 மில்லி மீட்டர், கடலூர் 93 மில்லி மீட்டர், காஞ்சிபுரத்தில் 70.5 மில்லி மீட்டர், திருவள்ளூர் 39.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னயின் எண்ணூர் பகுதியில் 90,5 மில்லி மீட்டர், மீனம்பாக்கம் 43.7 மில்லி மீட்டர், தரமணி ஏ.ஆர்.ஜி 47 மில்லி மீட்டர், கத்திவாக்கம் ஜி.சி.சி 69.3 மில்லி மீட்டர், முகலிவாக்கம் ஜி.சி.சி 53.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“