Coimbatore, Madurai, Trichy News: வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

நீலகிரி, தென்காசி, தேனி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

Advertisment

சிறுமி பாலியல் வன்கொடுமை: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது. தகவல் தெரிந்தால் 99520 60948 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

  • Jul 21, 2025 18:49 IST

    வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி

    சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகாசி ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 அறைகள் தரைமட்டமானது. பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2025 18:12 IST

    சிவகாசி: வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து

    சிவகாசி ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 அறைகள் தரைமட்டமானது. பட்டாசு ஆலை விபத்தை தொடர்ந்து உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 21, 2025 17:46 IST

    நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

    நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜூலை 21) முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



  • Jul 21, 2025 17:26 IST

    சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 33 சிலிண்டர்கள் பறிமுதல்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 33 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.



  • Jul 21, 2025 17:15 IST

    மேட்டூர் அணையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு

    மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை நிலவரப்படி, வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நீர் வரத்து விநாடிக்கு 23,000 கன அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.



  • Jul 21, 2025 16:41 IST

    பட்டாசு ஆலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

    சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 21, 2025 16:37 IST

    போஸ்டர் ஒட்டி குற்றவாளியை தேடும் போலீசார்

    கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 மொழிகளில் போஸ்டர் தயாரித்து குற்றவாளியை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. முக்கிய இடங்களில் குற்றவாளியின் புகைப்படத்துடன் ஒட்டப்படும் போஸ்டரில் 9952060948 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். 



  • Jul 21, 2025 16:16 IST

    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 21, 2025 16:01 IST

    கன்னியாகுமரி பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

    கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளியாறு அரசு ரப்பர் தோட்டத்தில் சிறுத்தை நடமாடுவதால் ரப்பர் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிறுத்தை தாக்க முயன்று ஒரு பெண் ஓடி வந்து உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Jul 21, 2025 12:10 IST

    ”அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்க்கடன்”

    திருவாரூரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடல் நடத்தினார். ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தின் ஒரு கட்டமாக விவசாயிகளுடன் சந்தித்து பேசி வருகிறார். அப்போது பேசிய அவர்; அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்க்கடன் வழங்கப்பட்டது. விவசாயிகளின் நெல் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது என்று கூறினார்.



  • Jul 21, 2025 12:05 IST

    விஷ வண்டு கடித்து இருவர் பலி

    தென்காசி, சீவநல்லூரில் கடந்தை வண்டு கொட்டி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். கடந்தை கொட்டி காயம் அடைந்த 3 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Jul 21, 2025 12:04 IST

    ஓரணியில் தமிழ்நாடு - மக்களிடம் ஓ.டி.பி பெற மதுரை ஐகோர்ட் தடை

    ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு மக்களிடம் ஓ.டி.பி பெற உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால் ஓ.டி.பி கேட்கக் கூடாது என்று நீதிபதி அறிவித்துள்ளார். 



  • Jul 21, 2025 11:57 IST

    அதிவேகமாக சென்ற லாரியில் மோதிய பைக்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அதிக வேகமாக சென்ற இருசக்கர வாகனம் லாரி மீது மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



  • Jul 21, 2025 11:31 IST

    திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு - பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் 

    திருவள்ளூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அருகே 8வயது சிறுமி கடந்த 12ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது வட மாநில இளைஞர் ஒருவரால் பாலியல் கொடுமை செய்யப்பட்டார் . இச்சம்பவம் தொடர்பாக 8க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் கடந்த 10 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியின் புகைப்படத்தையும் வீடியோ காட்சியையும் போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடி உள்ளனர். குற்றவாளி குறித்த புகைப்படங்கள், புதிய கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் ஆகியவற்றை பதிவிட்டு தகவலை தெரிவிக்க குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் 99520 60948 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க போலீசார் தரப்பில் வேண்டுகோள் விடுத்தது.இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு மேற்கொண்ட வேண்டுகோள் பொதுமக்களுக்கு வைக்கப்பட்டது.



  • Jul 21, 2025 09:23 IST

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

    கனமழை காரணமாக சுருளி மற்றும் சின்ன சுருளி அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2025 09:22 IST

    தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

    கோவையில் தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை 2 நாட்களில் உயிரிழந்தது. 40 வது நாளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சொட்டு மருந்து கொடுத்து நான்கு தடுப்பூசி போட்டுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் தொடையில் வீக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களாக அழுதுகொண்டே தூக்கம் இல்லாமல் இருந்துள்ளது. 



  • Jul 21, 2025 09:20 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை

    கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது. தகவல் தெரிந்தால் 99520 60948 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளது.



  • Jul 21, 2025 09:20 IST

    மழை நிலவரம்

     நீலகிரி, தென்காசி, தேனி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது. 



Tamilnadu News Latest tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: