/indian-express-tamil/media/media_files/2025/07/23/aloor-shanavas-eps-2025-07-23-21-33-10.jpg)
Today Latest Live News Update in Tamil 6 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் குளறுபடிகள்: குரூப் 4 விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டதில் எவ்விதமான குளறுபடிகளும் நிகழவில்லை. விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன என்று வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவையாகும் என டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.
-
Jul 23, 2025 21:42 IST
ஆகஸ்ட் 2-ல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடக்கம் - மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஆகஸ்ட் 2-ல் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் முழுவதும் 1,557 முகாம்கள், சென்னையில் 15 இடங்களில் நடக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 23, 2025 21:30 IST
அ.தி.மு.க-வை பா.ஜ.க ஏற்கனவே விழுங்கி விட்டது - இ.பி.எஸ்-க்கு ஆளுர் ஷாநவாஸ்
வி.சி.க-வை தி.மு.க விழுங்கி விடும் என்ற எடப்பாடி பழனிசாமி கருத்திற்கு வி.சி.க எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ், வி.சி.க-வை திமுக விழுங்கிவிடும் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. விழுங்குவதும் ஏப்பம் விடுவதும் பா.ஜ.க-வின் வேலை. முனை மழுங்குவதும் பாதாளத்தில் விழுவதும் அ.தி.மு.க-வின் நிலை. அ.தி.மு.க-வை பா.ஜ.க விழுங்கி 8 ஆண்டுகள் ஆகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்து நிலைமையை இனி அ.தி.மு.க எட்டவே முடியாது" என்று என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
Jul 23, 2025 20:41 IST
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.2,500 - இ.பி.எஸ் உறுதி
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பொங்கல் பரிசாக குடும்பத்துக்கு ரூ.2,500 தரப்படும். தீபாவளி பண்டிகையில் பெண்களுக்கு தரமான சேலை வழங்கப்படும்” என்று கூறினார்.
-
Jul 23, 2025 19:17 IST
“மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்... ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் - உதயநிதி ஸ்டாலின் தகவல்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்; மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் அன்பினாலும் ஓரிரு நாட்களில் வீடு திரும்ப உள்ளார்” என்று தெரிவித்தார்.
-
Jul 23, 2025 19:10 IST
பெரம்பலூர் அருகே பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்ல ஐகோர்ட் உத்தரவு
பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் பட்டியலின மக்களின் தெருவில் தேர் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வேப்பந்தட்டையில் ஸ்ரீவேதமாரியம்மன் கோயில் திருவிழா தொடர்பான வழக்கில், பட்டியலின் மக்களின் தெருவில் தேர் செல்லவும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 23, 2025 18:48 IST
சீன சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் விசா - மத்திய அரசு அறிவிப்பு
5.5 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூலை 24) முதல் மீண்டும் சீன சுற்றுலாப்பயணிகளுக்கு விசா வழங்க உள்ளது மத்திய அரசு . இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ராஜதந்திர ஈடுபாடுகளின் ஒரு பகுதியாக ஜின்பிங்கை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
Jul 23, 2025 18:25 IST
அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்
கோர்ட் உத்தரவை மீறி, ஆவணங்கள் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. விருப்பப்பட்டால் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Jul 23, 2025 18:21 IST
ஆன்லைன் ரம்மி விளம்பரம் - நடிகர் ராணாவுக்கு சம்மன்
ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர் ராணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜராக நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராகவிருந்த நிலையில் நடிகர் ராணா அவகாசம் கேட்டிருந்தார். விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ED சம்மன் அனுப்பியது.
-
Jul 23, 2025 18:20 IST
பாக்., விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த தடை நீட்டிப்பு
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நாளையுடன் நிறைவடைய இருந்த நிலையில் அந்த தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைசகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்த அடுத்த மாதம் 24ம் தேதி வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jul 23, 2025 17:45 IST
ம.நீ.ம. கட்சியின் பெண் நிர்வாகி கைது
சென்னை சைதாப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் உடான தகராறில் ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையில் ஆட்டோவில் சென்றபோது, வேறு பாதையில் சென்றதை கேட்டபோது தாக்குதல் நடத்தினார். ம.நீ.ம. நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
-
Jul 23, 2025 17:08 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை: குண்டாஸ்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டாஸை ரத்து செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக காவல்துறை வாதிட்டது. 26 பேர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
-
Jul 23, 2025 16:54 IST
"தீபாவளிக்கு பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும்"
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு, பெண்களுக்கு நல்ல புடவை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். , திருவையாறு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட தேரடி அருகே உள்ள தெற்கு வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசுகையில்,"தாய்மார்கள், சகோதரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீபாவளிக்கு நல்ல புடவை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
-
Jul 23, 2025 16:52 IST
அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் தீ
அகமதாபாத்தில் இருந்து புறப்பட இருந்த இன்டிகோ விமானத்தின் எஞ்சின் பகுதி தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது
-
Jul 23, 2025 16:51 IST
"குரூப் 4 தேர்வர்களை பலியாக்குவதில் நியாயமில்லை"
பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளுக்கான மதிப்பெண்களை, அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்க வேண்டுமென தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில், மொத்தம் 200 கேள்விகளில், தமிழ்ப் பாடத்திற்கு மட்டும் 100 கேள்விகள் உள்ளன. கடந்த 12.07.2025, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தேர்வில், தமிழ்ப் பாடத்தில் கேட்கப்பட்ட 100 கேள்விகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள், பாடத்திட்டத்தில் இல்லாத, கேள்விகளே புரியாத வண்ணம், மிகவும் சிக்கலான கேள்விகளாக கேட்கப்பட்டுள்ளன என தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Jul 23, 2025 16:40 IST
28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஈரோடு மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
-
Jul 23, 2025 16:38 IST
சபரிமலையில் தனியார் ஐயப்பன் சிலை பிரதிஷ்டைக்கு தடை
சபரிமலை கோயிலில் தனி நபர் வழங்கும் ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய தனி நபர் வழங்கி உள்ளார். தனி நபர் வழங்கிய ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலில் பிரதிஷ்டை செய்ய திருவாங்கூர் தேவசம் போர்டு சிறப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார். சிலை பிரதிஷ்டை தொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. தனி நபர் வழங்கிய சிலையை பிரதிஷ்டை செய்யும் அனுமதிக்கு 2 வாரம் தடை விதித்தது நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா அமர்வு உத்தரவிட்டது.
-
Jul 23, 2025 16:33 IST
முதலமைச்சர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
முதலமைச்சர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 23, 2025 16:27 IST
சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் விசா
ஐந்தரை ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஜூலை 24) முதல் மீண்டும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு விசா வழங்க உள்ளது
-
Jul 23, 2025 16:13 IST
சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு உத்தரவு
படத்தில் நடிப்பதற்காக பெற்ற முன் பணத்தை திருப்பித்தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், ரூ.5.90 கோடிக்கு சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் மூலம் தங்களுக்கு எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும், அதற்கு பதிலாக பணத்தை திரும்ப அளித்து விடலாமே? என நீதிபதி கருத்து தெரிவித்தார். இரு தரப்புக்கு இடையேயான பிரச்னையை தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
-
Jul 23, 2025 16:11 IST
ஓரணியில் தமிழ்நாடு – ஓ.டி.பி பெற தடை விதித்ததற்கு அ.தி.மு.க கேவியட் மனு
ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க உறுப்பினர் சேர்க்கைக்கு மக்களிடம் ஓ.டி.பி பெற தடை விதித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது
-
Jul 23, 2025 15:50 IST
டி.எஸ்.பி.,க்கு ஆதரவாக வீடியோ – காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
மயிலாடுதுறை டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட கிண்டி காவல்நிலைய காவலர் செல்வத்தை, ஆயுதப்படைக்கு மாற்றி சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
-
Jul 23, 2025 15:01 IST
மருத்து படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்பிக்க கால அவகாசம் நீடிப்பு
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் MBBS, மற்றும் BDS மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை திருத்தி சமர்பிப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் கல்வி இயக்குனரகம் தகவல் தெரிவித்துள்ளது,
-
Jul 23, 2025 14:03 IST
மேம்பால கட்டுமான பணிகளை ஆய்வு செய்த எ.வ.வேலு
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெற்றுவரும் மேம்பால கட்டுமான பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அக்டோபர் 31ம் தேதிக்குள் மேம்பால பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
-
Jul 23, 2025 14:02 IST
இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
இன்றும், நாளையும் நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை 25ல் குமரி, கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஜூலை 26, 27ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
Jul 23, 2025 13:55 IST
விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்: மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்தபடியே #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! pic.twitter.com/UYlcZz5yey -
Jul 23, 2025 13:18 IST
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. 7 முதல் 11 செ.மீ. வரை கனமழைக்கு என்பதால் 5 நாட்கள் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று முதல் 5 நாட்கள் 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
Jul 23, 2025 12:57 IST
மருத்துவமனையில் இருந்து மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் காணொலியில் மக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற மக்களுடன் காணொலியில் முதல்வர் உரையாடினார். மக்களிடம் கோரிக்கைகள் குறித்து விவரங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் கேட்டறிந்தார். மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மக்களுடன் காணொலியில் கலந்துரையாடினார். மேலும் கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
-
Jul 23, 2025 12:45 IST
மிக்-21 போர் விமானங்களுக்கு நிரந்தர ஓய்வு
இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளாக பணியாற்றி வந்த மிக்-21 போர் விமானங்களுக்கு நிரந்தர ஓய்வு. சீனா, பாகிஸ்தானுடனான போரில் முக்கிய பங்களிப்பை மிக் விமானங்கள் வழங்கின பாலகோட் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகளிலும் முக்கிய பங்காற்றின. மிக் ரக விமானங்கள் பழைய தொழில்நுட்பம் கொண்டவை என்பதால், படையிலிருந்து நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.
-
Jul 23, 2025 12:37 IST
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ பேச்சு
மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதை தடுக்க, கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ வலிவுறுத்தியுள்ளார். இலங்கை மீது பொருளாதார கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் எனவும் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.
-
Jul 23, 2025 12:31 IST
சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP மருத்துமனையில் அனுமதி!
சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு DSP சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jul 23, 2025 12:14 IST
அன்புமணி நடைபயணம் – இலச்சினை வெளியீடு
பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ள உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாளை மறுநாள் (ஜூலை 25) பயணத்தை அன்புமணி தொடங்குகிறார்.
-
Jul 23, 2025 12:12 IST
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது; திட்டத்தில் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கிறார்கள் அரசு செலவில் பலகோடி ரூபாய் பணத்தை பிரசாரத்துக்கு பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
-
Jul 23, 2025 12:11 IST
2ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை
சென்னை ஏழுகிணறு பகுதியில் 2ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை. பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்; ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது,
-
Jul 23, 2025 12:06 IST
குடியரசு துணைத் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் மோடியுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். சுதந்திர தினத்திற்கு முன்பாக குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது
-
Jul 23, 2025 12:05 IST
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல்
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியதாக தகவல். ஓரிரு நாட்களில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு அடுத்த மாதம் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டம்.
-
Jul 23, 2025 12:02 IST
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்: டிடிவி தினகரன் திட்டவட்டம்!
2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சியே அமையும் என டிடிவி தினகரன் திட்டவட்டம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
-
Jul 23, 2025 11:48 IST
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jul 23, 2025 11:30 IST
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று (ஜூலை 23) நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆப்ரேஷன் சிந்தூர், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
-
Jul 23, 2025 11:16 IST
ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார் என இன்று மருத்துவர்கள் கூறுவார்கள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் இன்று கூறுவார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
-
Jul 23, 2025 10:49 IST
மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு
மதுரை ஆதீனத்திற்கு அளிக்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால், முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jul 23, 2025 10:22 IST
தனிநபர் வருமான குறியீடு; இந்திய அளவில் 2-ஆம் இடத்தை பெற்ற தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்
தனிநபர் வருமான குறியீடு பட்டியலில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இதற்கு, "கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்" என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், திராவிட மாடல் 2.0-வில், முதல் மாநிலமாக உயருவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சராசரியை விஞ்சினோம்!
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்! https://t.co/A5l9xs22X5 -
Jul 23, 2025 09:32 IST
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்த திட்டம்
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே தேர்தலை நடத்தி முடிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 60 நாட்களுக்குள் புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.
-
Jul 23, 2025 09:30 IST
பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக செயல்படுகிறது - தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்
ஓரணியில் தமிழ்நாடு என்ற சூழ்ச்சி வாசகத்துடன் பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக செயல்படுகிறது. உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பண்ணையாளர்களாக வலம் வந்த திமுகவினர் இன்று பணியாளர்களாக வீதி, வீதியாக வலம் வருகின்றனர் என ஆனந்த் தெரிவித்துள்ளார்.
-
Jul 23, 2025 09:01 IST
“தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்” -அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
-
Jul 23, 2025 08:34 IST
திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை - உ.பி இளைஞரிடம் விசாரணை!
திருவள்ளூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்திரபிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தைப்போல இருப்பதால் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மதுபோதையில் கீழே விழுந்ததாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Jul 23, 2025 08:16 IST
சென்னையின் முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமராக்கள்
சென்னையின் முக்கிய சாலைகளில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தும் பணி, 2 மாதங்களில் செயல்படுத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது. அசோக் பில்லர், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் 9 முக்கிய சாலைகளில் 205 ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. "போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் சென்னையில் தப்ப முடியாத அளவிற்கு கேமராக்கள் பொருத்தப்படும்" என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
-
Jul 23, 2025 07:55 IST
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்வு - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் சராசரியாக 8.15% வளர்ச்சியடைந்து 2024 - 25யில் ரூ.1.96 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 2016 - 2017 முதல் 2020-21 வரை 4.42% மட்டுமே வளர்ச்சி அடைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57%ஆனால் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3.% ஆகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
-
Jul 23, 2025 07:50 IST
திருப்பதி லட்டு சர்ச்சையைத் தொடர்ந்து, பிரத்தியேக ஆய்வகம் திறப்பு!
திருப்பதி லட்டு சர்ச்சையைத் தொடர்ந்து, தண்ணீர், நெய் உள்ளிட்ட பிரசாதங்களின் மூலப் பொருட்களை ஆய்வு செய்யும் பிரத்தியேக ஆய்வகத்தை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு திறந்து வைத்தார்.
-
Jul 23, 2025 07:28 IST
இராசேந்திர சோழன் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இராசேந்திர சோழனின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
Jul 23, 2025 07:26 IST
தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து
உளுந்தூர்பேட்டை பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் விபத்தா? என விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.