/indian-express-tamil/media/media_files/2025/02/26/RJXtLOjjpmEm6MWNwEKE.jpg)
கவின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு: நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம்: கோவை, நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தேனி,தென்காசி, சேலம், விழுப்புரம், தி.மலை, அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Aug 04, 2025 00:07 IST
மரத்தில் கார் மோதி விபரீதம்
திருவள்ளூர், திருத்தணி அருகே சாலையோர மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 3 பேர் மரணமடைந்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டவருக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூரில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம். ஓசூரை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
-
Aug 03, 2025 17:29 IST
சீமான் பேட்டி
தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என சீமான் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
-
Aug 03, 2025 16:55 IST
ஓபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு
சொந்த ஊரான பெரியகுளம் சென்ற ஓ.பன்னீர் செல்வத்திற்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் முதன்முறையாக சொந்த ஊர் சென்ற ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
-
Aug 03, 2025 16:54 IST
போலீசாரின் வித்தியாசமான நண்பர்கள் தின வாழ்த்து
தஞ்சாவூரில் நண்பர்கள் தினத்தையொட்டி, ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் கொடுத்து போக்குவரத்து காவல் துறையினர் வாழ்த்தினர்.
-
Aug 03, 2025 16:18 IST
உறவினர்கள் போராட்டம்
திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் உள்ள மூடிய கிணற்றில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு, திருப்பத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Aug 03, 2025 15:45 IST
கன்னியாகுமரி: மொட்டவிளை பகுதியில் இளம்பெண் மீது ரேஸ் பைக் மோதி விபத்து
கன்னியாகுமரி மொட்டவிளை பகுதியில் இளம்பெண் மீது ரேஸ் பைக் மோதி விபத்து. சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-
Aug 03, 2025 15:17 IST
தடையை மீறி மாடு மேய்க்க மலைப்பகுதிக்கு சென்ற சீமான்; தடுத்து நிறுத்திய வனத்துறையினருடன் வாக்குவாதம்
போடி அருகே கால்நடைகளுக்கு மேய்ச்ச நில உரிமை கோரி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான், மாடுகளை மேய்க்க மலைப் பகுதிக்கு சென்ற சீமானை வனத்துறையினர் தடுத்து நிறுத்திதனர். இதனால், சீமானுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
-
Aug 03, 2025 14:06 IST
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான முன்னறிவிப்பு:
ஆகஸ்ட் 3: கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 4: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 5: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 6 முதல் 9 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
-
Aug 03, 2025 13:38 IST
தடையை மீறி போடி அருகே மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கால்நடை மேய்ச்சல் உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். போடி அருகே உள்ள அடப்பாறை மலைப்பகுதியில் மாடுகளுடன் நுழைந்து சீமான் இந்த போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டம் மலைப்பகுதியில் நுழைய விதிக்கப்பட்ட தடையை மீறி நடத்தப்பட்டது.
-
Aug 03, 2025 13:12 IST
திருப்பத்தூரில் கிணற்றில் சடலமாகக் கிடந்த மாணவனின் உடலில் தீக்காயங்கள் - உறவினர்கள் சாலை மறியல்
திருப்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியின் கிணற்றில் ஒரு மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அம்மாணவனின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். முகம் மற்றும் கை, கால்களிலும் காயங்கள் இருந்ததாகக் கூறி காவல்துறைக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
Aug 03, 2025 11:17 IST
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்வு; நீர்வளத்துறை எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் நாளை 120 அடியை எட்டும் என்பதால், உபரி நீர் எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் திறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Aug 03, 2025 10:22 IST
கிணற்றில் 11 ஆம் வகுப்பு சிறுவன் உடல் மீட்பு
திருப்பத்தூர் அருகே தனியார் பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் இருந்து 11ஆம் வகுப்பு மாணவர் உடல் மீட்க்கப்பட்டது. பள்ளி விடுதியில் தங்கி படித்தவர் மாயமான நிலையில் 2 நாள் தேடுதலுக்கு பின் மூடப்பட்ட கிணற்றில் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அளித்துள்ளது.
-
Aug 03, 2025 10:20 IST
சீமான் நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் - 500க்கும் மேற்பட்ட மாடுகள் அடைப்பு
தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் இன்று சீமான் நடத்தும் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்திற்காக 500க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன.
-
Aug 03, 2025 09:36 IST
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம்
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம். அஜீத்குமாரை அழைத்து சென்ற வேனின் ஓட்டுநர் ராமச்சந்திரன் முக்கிய சாட்சியாக மாறி உள்ளார். அஜீத் அனுபவித்த கஷ்டடி சித்ரவதைகளுக்கு நேரடி சாட்சியாக உள்ளவர் ராமச்சந்திரன்.
-
Aug 03, 2025 09:34 IST
`ஆடிப்பெருக்கு விழா' பொதுமக்கள் உற்சாக வழிபாடு
காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள், புதுமண தம்பதியினர் மங்கள பொருட்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
-
Aug 03, 2025 09:33 IST
கவின் தந்தைக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் தந்தைக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.