தற்போது ஏற்பட உள்ள புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மென் பேசியதாவது : ” இது ஒரு மேடன் ஜுலைன் ஆசிலேஷன் வேவ், நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளுக்கு மழை பெய்ய சாதமாக உள்ளது. இந்த அலை பேஸ் 3 மற்றும் 4 வரும்போது சாதகமாக இருக்கும். புயல் ஏற்படவும் சாதகமாக இருக்கிறது. முதல் வாரத்திற்கு பிறகு பேஸ் 4-க்கும் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் நிலையை நாம் 2015ம் ஆண்டோடு ஒப்பிட முடியாது. நவம்பர் மாதத்தில் மட்டும் 25 நாட்கள் மழை பெய்துள்ளது. அதில் நேற்றுதான் சென்னையில் அதிக கனமழை பெய்தது.
நிறைய இடங்களில் 150 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்துள்ளது. மீண்டும் வெள்ளம் ஏற்படுமா என்பதை நாம் பொருத்திருந்து பார்துதான் முடிவு செய்ய வேண்டும். சென்னை, வட தமிழகம், டெல்டா பகுதிகள், திருபத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற இடங்களில் கூட நல்ல மழை பெய்யும். இந்த புயல் அருகில் வந்து, வளைந்து தென் ஆந்திராவிற்கு செல்வதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களுக்குதான் அதிக மழை பெய்யும். 3ம் தேதிதான் புயல் அருகில் வரப்போகிறது. அதற்குள் ஏற்படும் மாற்றங்களை நாம் பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“