தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா வானிலை மையம் நேற்று வெளியிடிருந்த அறிவிப்பில், “ வங்கக் கடலில் நிலவி இருந்த குறைந்த தாழ்வுப் பகுதி காலை 8.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுப்பெற்று. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மே 24ம் தேதி மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 25ம் தேதி வங்கக்கடலில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயல் வடக்கு திசையில் நகடந்து 26ம் தேதி மாலை வங்க தேசம் அருகே தீவிர புயலாக வலுப்பெறும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வும் மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருப்பூர், கோவை, தென்காசி, நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“