வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என அறிவித்துள்ள நிலையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. மேலும் அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமகாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கரூர், தேனி, தருமபுரி, திருவாரூர், நாமக்கல், நாகை, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டி.13) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இத்துடன் இம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (டிச.13) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் பல்கலைக்கழக தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இனைவு பெற்ற கல்லூரிகளில் நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.