நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 72 மணிநேரத்தில் 2136 மி.மீ மழை பொழிந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன், தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தறபோது நல்லமழை பெய்து வருகிறது. இதனிடையே, மழைப்பொழிவு தொடர்பாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், கடந்த 72 மணிநேரங்களில் 2136 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி - 405 மி.மீ
ஆகஸ்ட் 8ம் தேதி - 820 மி.மீ
ஆகஸ்ட் 9ம் தேதி - 911 மி.மீ மழை பெய்துள்ளது.
9ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி அதிகபட்ச மழை பதிவாகியுள்ள இடங்கள்
அவலாஞ்சி - 911 மி.மீ
பார்சன்ஸ் வேலி - 600 மி.மீ
முக்குருதி - 497 மி.மீ
அப்பர் பவானி - 450 மி.மீ
எமரால்ட் - 361 மி.மீ
தேவலா - 257 மி.மீ
கூடலூர் - 249 மி.மீ
பைக்காரா - 244 மி.மீ
நடுவட்டம் - 221 மி,மீ
ஊட்டி - 188 மி,மீ
குன்னூர் - 102 மி,மீ.
ஆகஸ்ட் மாதத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
சின்னகல்லார் - 372 மி.மீ
பெரியகல்லார் - 344 மி.மீ
சின்கோனா - 315 மி.மீ
சோலையார் அணை - 282 மி.மீ
பரம்பிக்குளம் - 260 மி,மீ
வால்பாறை - 259 மி.மீ
ஆழியார் அணை - 165 மி.மீ
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - 130 மி.மீ
கோவை தெற்கு - 120 மி.மீ
பீளமேடு - 106 மி.மீ
தேனி மாவட்டம்
தேக்கடி - 235 மி,மீ
பெரியார் அணை - 201 மி,மீ
வீரபாண்டி - 61 மி,மீ
உத்தமபாளையம் - 57 மி.மீ
கூடலூர் பஜார் - 53 மி.மீ
போடி - 44 மி.மீ
திருப்பூர் மாவட்டம்
திருமூர்த்தி அணை - 130 மி,மீ
உடுமலைப்பேட்டை - 70 மி.மீ
அமராவதி அணை - 62 மி,மீ
பல்லடம் - 59 மி.மீ
கன்னியாகுமரி மாவட்டம்
அப்பர் கோடையாறு - 62 மி,மீ
லோயர் கோடையாறு - 40 மி,மீ
குழித்துறை - 40 மி,மீ
திருநெல்வேலி மாவட்டம்
செங்கோட்டை - 49 மி,மீ
தென்காசி - 44 மி,மீ
1995ம் ஆண்டு ஜூன் 15 மற்றும் 16 (48 மணிநேரத்தில்) தேதிகளில் சிரபுஞ்சியில் பெய்த 2493 மி.மீ. மழையே, உலக சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.