Rainfall in Tamilnadu Nivar Cyclone Updates Tamil News : நிவர் புயல் எச்சரிக்கையின் மத்தியில், அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு தமிழ்நாடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த செவ்வாய்க்கிழமை கணித்தது.
பலத்த மழை பெய்தால் சாலைகள் மற்றும் குடியேற்றங்களில் வெள்ளம், நகராட்சி சேவைகளுக்கு இடையூறு, போக்குவரத்துக்கு பெரும் இடையூறு, பாலங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குச் அதிகப்படியான சேதம் ஏற்படலாம், பாதிக்கப்பட்ட சமூகங்களின் இடம்பெயர்வும் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்தது.
அந்த வரிசையில் தமிழ்நாட்டில் நேற்று சென்னை தாம்பரத்தில் அதிகபட்சமாக 9 செ.மீ மழையும், எம்ஜிஆர் நகரில் 8 செ.மீ மழையும், ஆலந்தூரில் 7 செ.மீ, கேளம்பாக்கத்தில் 6 செ.மீ, கோளப்பாக்கத்தில் 5 செ.மீ, பெரம்பூரில் 4 செ.மீ, செங்கல்பட்டு, பூந்தமல்லி, ரெட் ஹில்ஸ் மற்றும் அம்பத்தூரில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், உத்திரமேரூர், கொரட்டூர், புழல், எண்ணூர், செம்பரப்பாக்கம், மதுராந்தகம், திருக்கழுகுன்றம ஆகிய இடங்களில் 2 செ.மீ மழையும் நாகப்பட்டினம், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், குமிடிபூண்டி, கடலூர் மற்றும் வந்தவாசி ஆகிய இடங்களில் 1 செ.மீ அளவு மழையும் பதிவாகி இருக்கிறது.
நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தில் இன்று, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமான மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமான முதல் மிக கனமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"