நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சில காட்சிகளில் வன்னியர் சமூதாயம் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறதாக சர்ச்சைகள் எழுந்தது.
Advertisment
இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை நடிகர் சூர்யா முன் வைத்தார்.இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட சூர்யா, “படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் என பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு, 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. தொடர்ந்து, சூர்யாவுக்கு துப்பாக்கி எந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடலூரில் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்த ராசா கண்ணுவை கம்மாபுரம் காவல்துறையினர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை மையமாக வைத்து "ஜெய் பீம்" திரைப்படம் எடுக்கப்பட்டது.
இப்படத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழும் முதனை கிராமத்தில் சாதிய வன்மத்தோடு ஒரு சாதியை மட்டும் தவறாக காட்சிப்படுத்தி இருப்பதாக கூறி அந்த கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஏற்கனவே ஜெய் பீம் பட காட்சிகளில் வன்னரியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது கிராம மக்கள் போராட்டத்தில் களமிறிங்கியுள்ளது படக்குழுவினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil