தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தனித்த சிறப்பை பெற்றது குமரி மாவட்டம். சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் பிரிவில், குமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
குமரியை தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் குமரி தந்தை மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்றது.
நேசமணியின் போர் படை தளபதிகளில் ஒருவராக இருந்தவர் பொன்னப்ப நாடார். குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைவதற்கு முன் கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்த 1952 ஆண்டு தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்திற்கு புதுமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த பின் 1962 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றார்.
தமிழகத்தில் 1967 சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று அண்ணா தலைமையில் முதல் முதலாக காங்கிரஸ் அல்லாத மாநில கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றது.
நாடாளுமன்றத்திற்கு 1971தேர்தல் நடந்த போது, தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் காலம் ஒரு வருடம் இருந்த போதும், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி நாடாளுமன்ற தேர்தலோடு ஒரே தேர்தலாக தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த முடிவெடுத்து, அன்றைய நடப்பு சட்டமன்றத்தை கலைத்து விட்டு.1972யில் நடக்க வேண்டிய தமிழக சட்டமன்ற தேர்தலை 1971_ல் நடத்தி மீண்டும் தி மு க.,ஆட்சி பொறுப்பிற்கு வந்தது.
பொன்னப்பநாடார் 1971 தேர்தலில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினராக வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்றம் 1971_1976 காலக் கட்டத்தில் தமிழக எதிர் கட்சி தலைவராக பொன்னப்பநாடர் இருந்தார்.
எனினும், அரசின் கெசட்டில் பொன்னப்பநாடர் எதிர் கட்சி தலைவர் என்ற அதிகார பூர்வமான தகவல் இல்லை.
கால ஓட்டத்தில் பொன்னப்பநாடாரின் மகன் பொன். விஜயராகவன் கிள்ளியூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர். ராஜேஷ் குமாரை தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன்னப்ப நாடரை அடுத்து அவரது மகன் விஜயராகவன் சட்டமன்ற உறுப்பினர் அடுத்து பேரன் ராஜேஷ் குமார் சட்டமன்றத்தில் பெருமை மிகுந்த காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியை பெறுகிறார்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“