கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்தாண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த யாத்திரையை தொடங்கிவைத்தார். இந்தப் நடை பயணம் 75 மாவட்டங்கள் வழியாக 4 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து ஜன.30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளில் நிறைவு பெற்றது.
Advertisment
இதன் வெற்றி விழா கொண்டாட்டங்கள் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, புதுக்கடை பகுதியில் இருந்து கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, இளைஞர்கள், இளம் பெண்கள், முதியோர்கள் எனப் பலரும் கையில் காங்கிரஸ் கொடி பிடித்து 10 கி.மீ. தூரம் உள்ள கருங்கல் வரை சென்று வெற்றி கோஷமிட்டனர்.
தொடர்ந்து, கருங்கல் சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்த கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆர். ராஜேஷ் குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், “தேசத் தந்தையின்யின் நினைவு தினத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் நிறைவு பெற்றது என்பது ஒரு வரலாற்று நிகழ்வாக உணர்கிறேன்.
இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் தொடங்கி மார்த்தாண்டத்தை தாண்டும் முன்பே பாஜகவினர் இளம் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டி-சர்ட் பற்றி அவதூறுகளை பரப்பினர். ஆனால் இது எதுவும் நிலைக்கவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் இந்த வரலாற்று பயணம் வாழ்க்கையில் கிடைத்த அற்புதம் எனப் பதிவிட்டுள்ளனர். இதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/