rajini and kamal tie up speech in politics - 'தேவை ஏற்பட்டால் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்' - ரஜினி, கமல் தனித்தனியே பேட்டி
அரசியல் சதுரங்கத்தில் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சித் தலைவர் திமுக ஸ்டாலினையே விஞ்சி பேசுபொருளாகி இருக்கின்றார் ரஜினிகாந்த். அரசியல் குறித்தும், அரசு குறித்தும், தலைமை குறித்தும் அவர் முன் வைக்கும் கருத்துகள், தினம் தொலைக்காட்சி சேனல்களுக்கு தீனி போட்டு வருகிறது.
Advertisment
தமிழகத்தில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது
எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள்; சிக்க மாட்டேன்
போன்ற சினிமா தாண்டிய ரஜினியின் பன்ச்கள் பற்ற வச்சுட்டியே பரட்டை என்கிற மோடில் உள்ளது.
Advertisment
Advertisements
குறிப்பாக, எடப்பாடி முதல்வர் ஆனதும் அதிசயம், இதுவரை ஆட்சி நடந்து கொண்டிருப்பதும் அதிசயம் என்ற ரஜினியின் வாய்ஸ் அதிமுகவினரை ஏகத்துக்கும் கடுப்பாக்கியிருக்கிறது.
போகிறபோக்கை பார்த்தால் ஸ்டாலின் vs பழனிசாமி என்பது கடந்து ரஜினி vs பழனிசாமி என்று வந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்நிலையில், "நானும், ரஜினியும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் டாக்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பிய கமல் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் இணைவதில் அதிசயம் எதுவும் இல்லை, ஏனென்றால் 44 ஆண்டுகாலமாக இணைந்துதான் இருக்கிறோம். இணையும் அவசியம் வந்தால் கண்டிப்பாக சொல்வோம். தற்போது வேலைதான் முக்கியம், இதைப்பேசுவது முக்கியம் அல்ல. சேர்ந்து பயணிப்பது என்பது, தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்கவேண்டி வந்தால் பயணிப்போம்" என்றார்.
இருவரின் கொள்கையும் ஒத்துப்போகுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "அதெல்லாம் அப்புறம் பேசிக்கொள்வோம். இப்ப என்ன? நிறைய டைம் இருக்கு. அப்புறம் பார்க்கலாம்" என்றார்.
இந்தச் சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கோவா செல்லுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், "தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும், இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம். துணை முதல்வர் ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில் கூற விரும்பவில்லை" என்றார்.