Advertisment

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் பாதிப்பு இல்லை - அதிமுக, திமுக தலைவர்கள் கருத்து

அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கலாம், வரும்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rajini announced political party, rajinikanth political party entry, ops opinion on rajinikanth political party, ரஜினிகாந்த் அரசியல் கட்சி, ஜெயக்குமார் கருத்து, திமுக எம்பி கனிமொழி கருத்து, ஓ.பன்னீர் செல்வம் கருத்து, jayakumar opinion on rajinikanth political party, dmk mp kanimozhi opinion opinion on rajinikanth political party, aiadmk

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவஙக்ப்படும் டிசம்பர் 31-ல் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதால் தங்கள் கட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் திமுக எம்.பி கனிமொழி இருவரும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகவும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார். ஆனால், அவருடைய உடல்நிலை காரணமாக அவர் அரசியலுகு வருவது கேள்விக்குறி என்று செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தனது அரசியல் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று கூறினார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சித் துவங்கப்படும் என்றும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். மேலும், வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் கட்டாயம்” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளும் அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கலாம், வரும்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என ரஜினி திமுகவை தான் சுட்டிக்காட்டியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, “ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால், திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dmk Rajinikanth Aiadmk O Panneerselvam Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment