நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை இரண்டாம் கட்டமாக இன்று முதல் 6 நாட்களுக்கு ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினி காந்த், “அரசியல் எனக்கு புதிது அல்ல. அரசியல் பற்றி தெரிந்ததால்தான் வர தயங்குகிறேன். அரசியலின் ஆழம் தெரியும். அரசியல் நிலைப்பாடு குறித்து 31-ஆம் தேதி அறிவிப்பேன். அரசியலுக்கு வர வீரம் போதாது. வியூகமும் வேண்டும்" என்றார்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் ரஜினியை எப்படியாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்று வந்திருந்தார். வாயில் ரஜினியின் படத்தை வைத்துக் கொண்டு, ராகவேந்திரா மண்டபத்தின் வெளியே நீண்ட நேரம் அவர் காத்திருந்தார்.
அவரிடம் நாம் பேச்சுக் கொடுத்த போது, "தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வரணும். அதைக் கேட்கத் தான் இங்கு கஷ்டப்பட்டு வந்தேன். அவரை பார்க்க முடியவில்லை என்றாலும், அவர் அரசியலுக்கு வந்தால் அதுவே போதும்" என்றார் உருக்கமாக.