நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவெடுப்பதற்காக, நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு, அவர் 2018ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்ததில் இருந்து ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தபோது, சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்று கூறி போட்டியிடவில்லை. தனது ஆதரவு யாருக்கும் என்றும் கூறவில்லை.
இதனிடையே, ரஜினியின் கருத்துகள் எல்லாமே ஊடகங்களில் அரசியல் முக்கியத்துவத்துடன் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ரஜினியின் செய்தியாளர்கள் சந்திப்பு எல்லாமே தமிழக அரசியல் அரங்கில் விவாதத்தை தூண்டியது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த சூழலில்தான், ரஜினியின் உடல்நிலை பற்றியும் கொரோனா காலத்தில் அவர் அரசியலில் ஈடுபடுவது அவரது உடல்நிலைக்கு சரியான முடிவு இல்லை என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக ரஜினி ரசிகர்களுக்கு கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் உலா வந்தது. இந்த கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இது தான் எழுதிய கடிதம் இல்லை. ஆனால், இந்த கடிதத்தில் தன்னுடைய உடல்நிலை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதி உண்மை உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாதோ என்ற ஒரு ஏமாற்ற நிலைக்கு சென்றனர்.
இந்த நிலையில்தான், ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து, நவம்பர் 30ம் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து பின் முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பால அவருடைய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி கூறியதுபோல, அவர் தமிழக அரசியலில் அற்புதம், அதிசயம் நடத்துவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், ரஜினி அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதமாக #RajinikanthPoliticalEntry ஹேஷ் டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், ரஜினி பல்வேறு தருணங்களில் அரசியல் கருத்துகளைக் கூறிய வீடியோக்களை பதிவிட்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும் நவ 30ம் தேதி அற்புதம் அதிசயம் நடக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், ஆன்மீக அரசியல் vs திராவிட அரசியல் என்றும் தலைவர் ஏமாற்றியது இல்லை என்றும் ஆன்மீக அரசியல் 2021 என்றும் ரஜினி ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ள சில ட்விட்டர் பதிவுகளை தொகுத்து கீழே தரப்பட்டுள்ளது.
#Thalaivar never Disappoint his Fans#Thalaivar #Superstar @rajinikanth#RajinikanthPoliticalEntry#ஆன்மீகஅரசியல்2021 ???? pic.twitter.com/3ot4koxTLD
— Rajinikanth Fans (@Rajni_FC) November 28, 2020
இப்போ தலைவர் entry ????????????
30th November.. mark your calendar ????
#RajinikanthPoliticalEntry @rajinikanth pic.twitter.com/QDP9ydoH5k
— SuseeMaha ???? ᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ???? (@SuseeMaha16) November 28, 2020
Let’s wait for Nov.30 whatever the decision is will stand by him – as he is always my role model , inspiration since childhood #Thalaivar #Superstar #Rajinikanth#RajinikanthPoliticalEntry @rajinikanth pic.twitter.com/YHsjo3gHq7
— Dr.Abiram Yokesh (@Abiram20548001) November 28, 2020
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரஜினி ரசிகர்களின் விருப்பம் நிறைவேறுமா? நிராசையாகுமா? என்பது நவம்பர் 30ம் தேதி என்பது ரஜினியின் அறிவிப்பு உறுதி செய்யும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Rajini fans trends rajinikanth political entry
வாழ்த்துக்கள் வீரர்களே…. பிரதமர் நரேந்திர மோடியின் அசத்தல் ட்விட்
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?
வரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா?
தடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்
பிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்
நானும் வாக்காளர்தான்’ ஆன்லைனில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்