Advertisment

ரஜினி மன்ற மா.செ.க்களை வளைத்த திமுக: 4 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

Rajini makkal manram district secretaries joined DMK :

author-image
WebDesk
New Update
ரஜினி மன்ற மா.செ.க்களை வளைத்த திமுக: 4 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு மாவட்டச் செயலாளர்கள் இன்று காலை திமுகவில் இணைந்தனர்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ. ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செல்வனாத் , தேனி மாவட்டச் செயலாளர் ஆர். கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே. வி. எஸ். சீனிவாசன் ஆகியோர் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தலைவர் மு. க ஸ்டாலின் முன்னிலையில் தங்களை  திமுக வில் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையே, மு. க ஸ்டாலின் முன்னிலையில், தேமுதிகவை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

 

முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வர இயலவில்லை என்று ரஜினி அறிவித்தார். ஆனால், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரின் ரசிகர்கள் சிலர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இந்த போராட்டம் குறித்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்ட ரஜினி, " நான் ஏன் அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கிவிட்டேன். என் முடிவை நான் கூறிவிட்டேன். தயவுசெய்து இதன்பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை வேதனைப்படுத்த வேண்டாம்.

நான் என் முடிவை கூறிவிட்டேன்.தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொகிறேன்.கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடதியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி " என்று தெரிவித்தார்.

ரஜினியின் இந்த அறிக்கை அவரின், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நான்கு மாவட்டச் செயலாளர்கள் இன்று திமுகவில் இணைந்திருப்பது ரஜினி ரகசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Rajinikanth Rajini Makkal Mandram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment