/tamil-ie/media/media_files/uploads/2018/05/rajinikanth-visit-thoothukudi.jpg)
ரஜினி மக்கள் மன்றம்
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இன்று புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த தனது ரசிகர்கள் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் :
ரஜினி மக்கள் மன்றத்திற்குள் சிலர் வேறு எண்ணங்களுடன் பயணிப்பதையும், ரஜினி மக்கள் மன்றம் குறித்த தவறான வதந்திகள் பரப்பப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 23-ம் தேதி அறிக்கை மூலம் விளக்கம் அளித்தார் ரஜினிகாந்த்.
அந்த அறிக்கை ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த அறிக்கைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று (26.10.18) இன்னொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ரஜினி.
ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை:
இன்றைய அறிக்கையில், ‘கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து சில உண்மையகளைச் சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருக்கும் உண்மையையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#JustIn ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது
- ரஜினிகாந்த் @rajinikanthpic.twitter.com/RVxVtbd8Vq
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 26 October 2018
உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும், யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்' என்று குறிப்பிட்டுள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.