Advertisment

முரசொலி வைத்திருந்தால் திமுககாரர்... துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என சொல்லிவிடலாம் - ரஜினி பேச்சு

துக்ளக் இதழ் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajini

துக்ளக் இதழ் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

Advertisment

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...

பத்திரிகையாளர், சோ.ராமசாமி தொடங்கிய துக்ளக் இதழ் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டனர்.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...

விழாவில், துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு இதழை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொள்ள முடியாததால் அவருடைய பதிவு செய்யப்பட்ட ஆடியோ உரை அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். “இன்று துக்ளக் பத்திரிகையின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் பொங்கலைக் கொண்டாடும்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கூறினார். பிரதமர் மோடி, இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள துக்ளக் பத்திரிகைக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு சோ இன்று இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

மேலும், “சோ எங்கள் எண்ணங்களில் எங்களுடன் இருக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களில் இந்த பத்திரிகை அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுவார். சோவுக்கு ஒரு சிறப்பு பாணி பத்திரிகை உள்ளது. அவரைப் பொறுத்தவரை, மூன்று விஷயங்கள் அடிப்படை. ஒன்று உண்மைகள். உண்மைகள் மிகவும் முக்கியமானது. அவை செய்திக்கு தார்மீக வலிமையைக் கொடுக்கின்றன. இரண்டாவதாக அறிவார்ந்த வாதங்கள் இருந்தன. ஒரு கருத்தை வகுக்க விரும்பும் எந்தவொரு வாசகனும் எப்போதும் புத்திசாலித்தனமான வாதங்களைப் பாராட்டுவான். அவை தர்க்கரீதியான காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை. மூன்றாவது தனித்துவமானது சோ. அவர் நையாண்டியில் விரிவான கவனம் செலுத்தினார். துக்ளக்கின் முதல் பக்கம் ஒரு நையாண்டி கார்ட்டூனைக் கொண்டு சென்றது. உங்கள் கருத்தைச் சொல்லவும் மக்களைப் பயிற்றுவிக்கவும் நையாண்டி சிறந்த வழியாகும். சோ நையாண்டியின் மாஸ்டர். பெரும்பாலான அரசியல்வாதிகள் இது வார இதழ் என்றும் தினசரி இல்லை என்பதற்கு நன்றி தெரிவித்தனர்” என்று மோடி கூறினார்.

இதையடுத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆந்திராவில் பாஜகவை கட்டியெழுப்புவதற்கு வெங்கையா நாயுடுவின் பங்களிப்பு பற்றியும் அவர் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கான உழைப்பு பற்றியும் கூறி அவரை பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், துக்ளக் பத்திரிகை சோ ராமசாமி இல்லாமல் 2 வாரங்கள்கூட நடக்காது என்ற நிலையில் குருமூர்த்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நடத்தி வருகிறார் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமரும், துணை குடியரசுத் தலைவரும் பேசுகிறார்கள் என்றால் அவர்கள் சோ மீது வைத்துள்ள மரியாதை. சோ துக்ளக் ஒரு வாசக பட்டாளத்தை மட்டுமல்ல ஒரு துக்ளக் என்கிற ஒரு இனத்தையே உருவாக்கினார்.

முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம். துக்ளக் பத்திகை வைத்திருந்ததால் அவர் அறிவாளியானாரா? அல்லது துக்ளக் படித்ததால் அறிவாளியானாரா? என்று தெரியாது.

சோ இரண்டு பேர்களால் பெரிய ஆளாக ஆனார். ஒருவர் அவரை எதிர்த்த பக்தவச்சலம். மற்றொருவர் கலைஞர்.

1971-இல் ராமர் சிலைக்கு பெரியார் செருப்புமாலை போட்டு ஊர்வலம் சென்றார். அந்த புகைப்படத்தை துக்ளக் பத்திரிகையில் வெளியிட்டார். அதனால், கெட்ட பெயர் வந்ததால் கலைஞர் பத்திரிகையை வெளியிடாமல் செய்தார். ஆனால், சோ அந்த பத்திரிகையை மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். அது பிளாக்கில் விற்பனையானது.

அதே போல, இந்திராகாந்தி காலத்தில் எமர்ஜென்ஸியின்போது சோ அதை கருப்பு நாள் என்று அச்சடித்து வெளியிட்டார். எமர்ஜென்ஸிக்கு எதிராக சோ பேசியபோது இந்தியா முழுவதும் பிரபலமானார்.

அனைவருக்கும் அன்றாடம் கவலைகள் வருகின்றன. கவலைகளை நிரந்தரமாக்கிக்கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிகொண்டால் நீ அறிவாளி. கவலைகளை எல்லாம் தற்காலிகமாக்கிக்கொண்ட அறிவாளி சோ.ராமசாமி.

இப்போது சோ.ராமசாமி போல ஒரு பத்திரிகையாளர் மிகமிக அவசியம். காரணம் காலம் ரொம்ப கெட்டுப்பொய்க்கொண்டிருக்கிறது. அரசியல் ரொம்ப கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது. சமுதாயம் ரொம்ப கெட்டுப்போய்க்கொண்டிருக்கிறது.

ஊடகங்களுக்கு பெரிய கடமை இருக்கிறது. சில பத்திரிகைகள், சில ஊடகங்கள், சில டிவி சேனல்கள் சில கட்சிகள் என்ன தப்பு செஞ்சாலும் அதைப்பற்றி பரவாயில்லை என்று சொல்வார்கள். ஆனால், நடுநிலையில் இருக்கிற பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், டிவி சேனல்கள் சுயநலமில்லாமல், சார்பு இல்லாமல் எது உண்மையோ, எது நியாயமோ, மக்களுக்கும் நாட்டுக்கும் எது நல்லதோ அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

செய்தி என்பது ஒரு பால். அந்த பால் என்பது உண்மை. அதில் பொய் என்ற தண்ணீரை கலந்துவிடுவார்கள். கலந்துவிட்ட பிறகு அது உண்மையான பாலா என்று மக்களுக்கு தெரியாது. அதில் எவ்வளவு பால், எவ்வளவு தண்ணீர் என்று பத்திரிகையாளர்கள்தான் மக்களுக்கு சொல்ல வேண்டும். பாலை தனியா பிரித்துவிட வேண்டும். தண்ணீரை தனியாக பிரித்துவிட வேண்டும்.” என்று கூறினார்.

பின்னர், ரஜினி தனது உரையில் வழக்கம் போல ஒரு குட்டி கதை கூறினார். “ஒரு கிராமத்தில் ஒரு பால் கடை இருந்தது. ஒருவர் கலப்படமில்லாத பால் விற்கிறார். ஒரு வீட்டுக்கு 10 ரூபாய் என்று விற்பனை செய்துகொண்டிருந்தார். நல்லமாதிரி இருந்தால் வாழவிடமாட்டார்களே. இன்னொருவர் வந்து பால் கடை வைத்தார். பாலில் தண்ணீர் கலந்து 8 ரூபாய் என்று விற்பனை செய்ய ஆரம்பித்தார். மக்கள் இயல்பாக தரம் எல்லாம் பார்க்காமல், விலை கம்மியாக இருக்கிறது என்று எல்லோரும் அங்கே போய் வாங்கினார்கள்.

ஒரு ஏமாற்றுக்காரன் இருக்கிறான் என்றால் அவனை ஏமாற்றுவதற்கு இன்னொரு ஏமாற்றுக்காரன் இருப்பான்.

இன்னொருத்தன் வந்து பாலில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து ஒரு வீட்டுக்கு 6 ரூபாய் என்று விற்பனை செய்ய ஆரம்பித்தான். ஆனால், 10 ரூபாய்க்கு பால் விற்பனை செய்தவன். வியாபாரம் இல்லை என்றாலும் நேர்மையாக அவனுக்கான வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்துகொண்டு வாழ்ந்து வந்தான்.

அப்போது அந்த பகுதியில் ஒரு விழா வந்தது. மக்கள் 6 ரூபாய், 8 ரூபாய் பால் எல்லாவற்றையும் வாங்கிவிட்டார்கள். அதனால், வேறு பால் இல்லை. அதனால், வேறு வழியில்லாமல் அனைவரும் இந்த 10 ரூபாய் பால் வாங்கிக்கொண்டு போனார்கள்.

பின்னர், அவர்கள் இந்த பாலைக்கொண்டு பட்சனம், பாயசம் எல்லாம் செய்யும்போது மிகவும் சுவையாக இருந்தது. அப்போதுதான் எல்லோருக்கும் இந்த பால் 10 ரூபாய் கடையில் இருந்து வாங்கிய பால் என்று தெரிந்தது.

இப்போது உண்மை வெளியே வந்துவிட்டது. உண்மை அனைவருக்கும் தெரிந்துவிட்டது. அதன் பிறகு, மக்கள் 10 ரூபாய் கடைக்கு சென்று பால் வாங்கினார்கள். இந்த 6 ரூபாய், 8 ரூபாய் கடைகள் காலியாகிவிட்டது.

அதனால், உண்மையை எழுதுங்கள். இருப்பதை எழுதுங்கள். தயவு செய்து பொய்யை உண்மையாக்காதீர்கள்.” என்று கூறினார்.

Rajinikanth Rajini Kanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment