Rajini Speech on 50th anniversary of Thuglak leaders reaction : 14/01/2020 அன்று பத்திரிக்கையாளர் சோ. ராமசாமி துவங்கிய துக்ளக் பத்திரிக்கையின் 50ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 50-வது ஆண்டுக்கான சிறப்பு மலரை வெங்கையா நாயுடு வெளியிட ரஜினி காந்த் பெற்றுக் கொண்டார். நேற்று பேசும் போது அவர் ”முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுகவினர் என்று கூறிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அவர்களை அறிவாளி என்று சொல்லிவிடலாம். துக்ளக் வைத்திருந்த்தால் அவர் அறிவாளியா அல்லது துக்ளக் படித்ததால் அவர் அறிவாளியா என்று தெரியாது” என சோ-வைப் பற்றி குறிப்பிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...
தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமாரின் பதிவு
இந்த பதிவிற்கு உண்மையான விளக்கம் அடுத்து வரும் ட்வீட்ல்
Video link: @Vijhaishekar ????????pic.twitter.com/5bCMgIreXr
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 14, 2020
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து
முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்
— Udhay (@Udhaystalin) January 14, 2020
#முரசொலி வைத்திருந்தால் திமுககாரர்; #துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி!
கல்வியை தனக்குள் வைத்திருந்த சிறுகூட்டம் துக்ளக்கையும், கல்வி மறுக்கப்பட்ட பெருங்கூட்டம் முரசொலியையும் படித்தனர்.
ஆனால், ரஜினி இந்த இரு இதழ்களையும் படித்ததில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது!
— Aloor Sha Navas (@aloor_ShaNavas) January 14, 2020
So Superstar Rajinikanth has made a stance, he is anti-DMK but in Tamil Nadu, you have to be either neutral or stay away from religious parties. This is a secular land my lord. #Murasoli rightly criticized the ruling parties, #Thuglak did the same.
— Rajasekar (@sekartweets) January 14, 2020
Two good things happened bcos of #Thalaivar yesterday’s speech,
1)fans pages shows their real faces they are run by political party’s IT
2) At least from now DMK members will start reading #Murasoli ,I never saw they used to read that....mostly politicians will use @ThanthiTV pic.twitter.com/CwIjq5qbYd
— ganesh babu (@ganeshjayabalan) January 15, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.