/tamil-ie/media/media_files/uploads/2018/03/rajinikanth...jpg)
Tamil Nadu news Live Updates
காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளது. இதன் உச்சக்கட்டமாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் போராட்டம் நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்று எதிர்ப்புகள் வந்தன. இருப்பினும் தடைகளை மீறி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் விளையாட்டு மைதானத்தை போராட்டக் களமாக மாற்றினர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தடியடி நடத்தப்பட்டது.
இந்தச் சம்பத்தில், இளைஞர் ஒருவர் காவலரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த வீடியோக் காட்சியை பார்த்த ரஜினிகாந்த், இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
,
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS
— Rajinikanth (@rajinikanth) April 11, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.