திமுக தலைவர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், ரஜினி மக்கள் மன்ற கல்வெட்டை திமுகவினர் அகற்றியதாக பரவிய தகவலை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தினர், #ரஜினி_பயத்தில்திமுக என்பதை டுவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினர்.
கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சீரமைத்து தந்துள்ளனர். ரஜினி மக்கள் மன்றத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றத்தினரின் இந்த செயலை பாராட்டும் வகையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்காக கொளத்தூரின் பல இடங்களில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அதேபோல், ரஜினி மக்கள் மன்றத்தினரை பாராட்டி கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஸ்டாலின் சென்ற வாரம் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அவர் வந்து சென்ற பிறகு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டு நீக்கப்பட்டதாக கூறுகின்றனர் . கொளத்தூர் பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை திமுகவினர் நீக்கியதாக கூறி, #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது ரஜினி அரசியல் வருவதற்கு முதல் படி என்று கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். ரஜினி அ.தி.மு.கவை விமர்ச்சிப்பர் என்று எதிர்பார்த்த தி.மு.க வின் கனவு தலைகீழானது இது தி.மு.க வினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.