நடிகர் ரஜினிகாந்த் பூத் கமிட்டி அமைப்பதில் கவனத்தை செலுத்துமாறு தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கபடும் டிசம்பர் 31ல் தேதி அறிவிக்கப்படும் என்று டிசம்பர் 3ம் தேதி அறிவித்தார். அதோடு, ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால் அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் அறிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ரஜினிகாந்த் தீவிரமாக அரசியல் ஆலோசனை பணிகள் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தி நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
அதற்கு முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவின் மணியன் ஆகியோர் உடன் கடந்த 2 நாட்களாக (டிசம்பர் 9, 10) ரஜினிகாந்த் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் இரண்டு கட்டங்களாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் உள்கட்டமைப்பு, மன்ற நிர்வாகம், கிளைகள் அமைப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது என்று மன்ற நிர்வாகிகள் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
தேர்தலில் வாக்குச்சாவடி பூத் கமிட்டி மிகவும் முக்கியமான ஒரு அங்கம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பூத் கமிட்டி அமைப்பதில் கவனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தியாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”