Advertisment

மாறி மாறி கலாய்த்த நண்பர்கள்; ‘வருத்தம் இல்லை’ - ரஜினிகாந்த்; ‘பகைச்சுவை அல்ல’ - துரைமுருகன் விளக்கம்

சினிமாவில் பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்று துரைமுருகன் கூறியதற்கு நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகன் எனது நண்பர், அவர் என்ன சொன்னாலும் வருத்தம் கிடையாது என்று கூற, ‘எனது கருத்து நகைச்சுவைதானே தவிர பகைச்சுவை அல்ல’ என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rajini durai

ரஜினிகாந்த் துரைமுருகன் எனது நண்பர், அவர் என்ன சொன்னாலும் வருத்தம் கிடையாது என்று ரஜினி கூற, எனது கருத்து நகைச்சுவைதானே தவிர பகைச்சுவை அல்ல என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகனை நகைச்சுவையாக கலாய்த்துப் பேசிய நிலையில், சினிமாவில் பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்று துரைமுருகன் பதில் அளித்திருந்தார். இதற்கு ரஜினிகாந்த் துரைமுருகன் எனது நண்பர், அவர் என்ன சொன்னாலும் வருத்தம் கிடையாது என்று ரஜினி கூற, எனது கருத்து நகைச்சுவைதானே தவிர பகைச்சுவை அல்ல என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தி.மு.க-வின் மூத்த தலைவரும் அமைச்சருமான எ.வ. வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இந்த நூல் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், இந்து என். ராம் வெளியிட்டுப் பேசினார்கள். 

விழாவில் நடிகர் ரஜினிகாந்த்-தின் பேச்சு மிகவும் நகைச்சுவையாகவும் உணர்வுப்பூர்வமகாவும் இருந்தது. இந்த விழாவில் பேசிய துரைமுருகன், எப்போதும் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், இந்த பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் ரொம்ப கடினம். தி.மு.க-வில் பல பழைய மாணவர்கள் ரேங்க் மேல ரேங்க் வாங்கிவிட்டு அங்கேயே இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் கலைஞர் சமாளித்தது பெரிய விஷயம். அதிலும் துரைமுருகன் என்று ஒரு பழைய ஸ்டூடன்ஸ் இருக்கிறார். அவர் கலைஞர் கண்ணுலயே விரலைவிட்டு ஆட்டுனவர். அவரிடம் கட்சியில் யாராவது ஒரு விஷயத்தை செய்துவிட்டு, அண்ணே எப்படி இருக்கிறது என்று கருத்து கேட்டால், அப்படியா சந்தோஷம் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார். நல்லா இருக்குது சந்தோஷம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படியெல்லாம் பண்றீங்கனு சொல்றாரா என்று புரிந்துகொள்ளவே முடியாது. இவர்களை எல்லாம் வைத்து சமாளிக்கும் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்று ரஜினிகாந்த் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சை, அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமல்லாமல் மேடையில் அமர்ந்திருந்த தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கைத்தட்டி ரசித்து சிரித்தார். ஆனால், அமைச்சர் துரைமுருகனுக்கு சங்கடமாகிப் போனது.

புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகனை நகைச்சுவையாகக் கலாய்த்துப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதைத் தொடர்ந்து, புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, “சினிமாவிலும் பல்லுபோன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது” என்று துரைமுருகன் பதிலுக்கு கலாய்த்தார்.

சட்டப் பேரவையிலும் சரி, சட்டப்பேரவைக்கு வெளியேயும் சரி அதிரடியாக அரசியல் கவுண்ட்டர் கொடுப்பதில் துரைமுருகன் பெயர் பெற்றவர். யாரும் எதிர்பாராத துரைமுருகனின் இந்த பதில், ரஜினி ரசிகர்களை கொஞ்சம் கோபப்படுத்திவிட்டது. ரஜினிகாந்த் நகைச்சுவையாகப் பேசியதற்கு, துரைமுருகன் இப்படி எதிர்வினையாற்றுகிறாரே என்ற பேச்சுகளும் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் பேசியது குறித்து கருத்து தெரிவிக்கையில், “துரைமுருகன் என் நீண்டகால நண்பர்; அவரை எணக்கு ரொம்ப பிடிக்கும்; அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது; எங்க நட்பு எப்போதுமே தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.  

ரஜினிகாந்த்தின் கருத்தைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன், தனது ரஜினி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “நடிகர் ரஜினி குறித்து நான் பேசியது நகைச்சுவைதானே தவிர பகைச்சுவை அல்ல; நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம்; நானும் ரஜினியும் தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rajinikanth Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment