ரஜினிகாந்த் உடைந்து போய் இருக்கிறார்... ரசிகர்கள் பகிரும் வைரல் வீடியோ

Rajinikanth viral video : ரஜினிகாந்த் கனத்த இதயத்தோடு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

Rajinikanth viral video : ரஜினிகாந்த் கனத்த இதயத்தோடு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை.

author-image
WebDesk
New Update
ரஜினிகாந்த் உடைந்து போய் இருக்கிறார்... ரசிகர்கள் பகிரும் வைரல் வீடியோ

Rajinikanth News:  வரும் 31-ம் தேதி தான் தொடங்க இருக்கும் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில்,"கட்சி ஆரம்பிக்கவில்லை’ என்று  அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவித்தார்.

Advertisment

உடல்நலனைக் கருத்தில் கொண்டு ரஜினிகாந்த  எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் நோக்கர்களும், பொது மக்களும், அவரின் தீவிர ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “கட்சி தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ஆரம்பிப்பேன் என்று நம்பிய ரசிகர்கள், மக்களுக்கு என் முடிவு ஏமாற்றம் தரும். தேர்தல் அரசியலுக்கு வராமால் என்னால் என்ன செய்யமுடியுமோ அதனை செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. ரசிகர்களும், மக்களும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், தனது அறிவிப்பில் " கட்சி தொடங்கவில்லை என்ற அறிவிப்பை வெளியிடும்போது ஏற்பட்ட மனவலி எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று ரஜினி குறிப்பிடிருந்தார்.

Advertisment
Advertisements

ரஜினி மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " ரஜினிகாந்த் அவர்களின் இதயம் தற்போது எவ்வாறு மகிழ்சியற்று இருக்கும் என்பதை நான் அறிவேன். அவரது முடிவினை முழு மனதுடன் வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கனத்த இதயத்தோடு இந்த முடிவை அறிவித்திருக்கிறார் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. இத்தகைய ஒரு முடிவு தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய மட்டத்தலும், உலக அளவிலும் உள்ள அவரின் ஆதாரவாளர்கள், சிநேகிதர்கள், அரசியல் தொடர்புகள், முக்கிய அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், ரஜினிகாந்த போயஸ் தோட்டத்தில்  உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியின் இயல்பான கம்பீரமான வேகமான நடை சுத்தமாக இதில் காணப்படவில்லை. நடையில் அதிக இறுக்கமும், பரி தவிப்பும் தெரிவதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: