நடிகர் ரஜினிகாந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி லதாவுடன் இன்று (செப். 17) கோவை வந்தார்.
ரஜினிகாந்த் வரும் முன்னரே அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
/indian-express-tamil/media/media_files/DBgDQ7rB5iUQJvHaZ17W.jpeg)
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்ததாக கூறினார்.
/indian-express-tamil/media/media_files/P45YN9Y3x57Mm08vvKD7.jpeg)
தொடர்ந்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து புறப்பட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“