கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் அவதூறு பரப்பிய விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு, பல்வேறு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும் என குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்ற, 'யூடியூப்' சேனலில், ஹிந்துக்கள் மனம் புண்படும்படி, அவர்கள் வழிபடும் கடவுள்களை இழிவுபடுத்தி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. கைதுமுருகப் பெருமானை போற்றி பாடப்படும், கந்தசஷ்டி கவசத்தை, கேவலமாக சித்தரித்தும், வீடியோ வெளியிடப்பட்டும் இருந்தது.இதுகுறித்து, புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த, யூடியூப் சேனல் நிர்வாகிகளான, சென்னை, போரூரை சேர்ந்த சுரேந்தர் நடராஜன் உட்பட, நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அந்த சேனலில் இருந்து வீடியோக்கள் நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ஜ., தலைவர் எல்.முருகன், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் ரஜினி இதுவரை எதுவும் கூறாமல் இருந்து வந்தார்.
#கந்தனுக்கு_அரோகரா pic.twitter.com/zWfRVpufXk
— Rajinikanth (@rajinikanth) July 22, 2020
இந்நிலையில், ரஜினி, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புன்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும் , கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்... ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!! . என்று குறிப்பிட்டுள்ளார்
டுவிட்டரில் டிரெண்டிங் : நடிகர் ரஜினிகாந்த் #கந்தனுக்கு_அரோகரா என்று பதிவிட்டுள்ள நிகழ்வை, நெட்டிசன்கள், டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதற்கு முன்னதாக, கடந்த 1ம் தேதி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.