மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார்.
திரையுலகில் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக விருதுபெற்ற ரஜினிகாந்த்துக்கு, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றவுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியும் நேரில் சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து பெற்றார். இரண்டு சந்திப்பின்போதும், நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி' என தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil