Rajinikanth: சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார் நடிகர் ரஜினி.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி முக்கிய ஆலோசனை
அரசியல் கட்சியைத் தொடங்கி 2021 சட்ட மன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக கட்சித் தொடங்கும் வேலையை அவர் ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து, சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார் ரஜினி.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Rajinikanth-Meeting-1.jpg)
இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். அங்கு ரசிகர்களும், மக்கள் மன்ற நிர்வாகிகளும் குவிந்தனர். ஆலோசனையில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். ஆலோசனையில் கலந்துக் கொள்வதற்காக ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 12 மணி வரை நடந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டார் ரஜினி. அப்போது அனைவரும் அவர் கட்சித் தொடங்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதிலிருந்து சில குறிப்புகளையும் எடுத்துக் கொண்டார் ரஜினி. அதோடு கட்சித் தொடங்கினால், கொரோனா பரவலில் பாதுகாப்பாக கையாள்வது எப்படி என்பது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் இது குறித்த அறிக்கை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Rajinikanth-Meeting.jpg)
இது குறித்து பேசிய நிர்வாகி ஒருவர், “தலைவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை இன்முகத்துடன் வரவேற்பதாகவும்’ கூறினார். அதோடு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, இன்று மாலை அல்லது நாளை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் எனவும் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தை முடித்து, வீடு திரும்பிய ரஜினி பத்திரிக்கையாளர்களிடம் பேசினார். அப்போது, மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. அவங்களோட கருத்தை என் கிட்ட சொன்னாங்க, என்னுடைய பார்வையை நான் பகிர்ந்துக் கிட்டேன். நீங்க என்ன முடிவெடுத்தாலும் உங்கக் கூட இருப்போம்ன்னு சொன்னாங்க. நா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் முடிவை தெரிவிக்கிறேன்’ என்றார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”