ரஜினிகாந்த்- தி.மு.க மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த்தை தி.மு.க-வின் மூத்த அமைச்சர் எ.வ. வேலு தனியாக சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்-ஐ, தமிழக மூத்த அமைச்சர் ஏ.வ. வேலுவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.
Advertisment
கடந்த மாதம் ஜெயிலர் படப்பிடிப்பை முடித்த பிறகு, அவர் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடிக்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரில்லர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.
‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் திருவண்ணாமலை சென்று அங்குள்ள தனியார் கல்லூரியில் தங்கி படப்பிடிப்பில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை கோவிலுக்கு அவ்வப்போது உதவி செய்து வருகிறார். நடிகர் ரஜினி கிரிவலப் பாதையில் 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்றுள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் ஜுலை 1-ம் தேதி திருவண்ணாமலை சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். நடிகர் ரஜினி கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்து ஏராளமான பொதுமக்கள் கோவிலை சூழ்ந்தனர்.
திருவண்ணாமலை அருண்ணாச்சலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து அம்மன் சன்னதி அருகே ரஜினிகாந்தை செல்பி எடுக்கவும், புகைப்படம் எடுக்கவும் பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்தை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பின்னர், ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனிடையே, திருவண்ணாமலையில் உள்ள தனது கல்லூரியில் தங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, திருவண்ணாமலையைச் சேர்ந்த தி.மு.க-வின் மூத்த அமைச்சர் ஏ.வ. வேலு மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை சென்ற ரஜினிகாந்த்தை தி.மு.க-வின் மூத்த அமைச்சர் எ.வ. வேலு தனியாக சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் - எ.வ. வேலு சந்திப்பு அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.