/tamil-ie/media/media_files/uploads/2020/03/a1663.jpg)
Rajinikanth New Party Press Meet : ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாகக் கூறி 2 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக, இன்னும் கட்சியைப் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த கேள்விக்கு இன்று நடைபெற இருக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த 5-ஆம் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்தினால் ஏற்றுக் கொள்வீர்களா என ரஜினிகாந்த் கேட்டதாகவும், அதற்கு பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மறுப்பு தெரிவித்து அவரே முதல்வர் வேட்பாளராக வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்
Live Blog
Rajinikanth New Party Press Meet
இன்று தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்துப் பேசுகிறார் ரஜினி. அது சம்பந்தமான லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us
இப்போதே 71 வயதாகிவிட்டது. இப்போது விட்டால் அடுத்த முறை பிடிக்க முடியும் என்ற நிலையில் நான் இல்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கெல்லாம் புரட்சி வெடித்த பின் நான் வருகிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சட்டசபைக்கு போய் பேச விரும்பவில்லை, கட்சிக்கு தலைவனாக மட்டுமே இருப்பேன். முதலமைச்சர் பதவியை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான் தமிழகத்தின் முதல்வராக விரும்பவில்லை
”நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநில கட்சி ஆட்சியைப் பிடித்த மண் இந்த மண். மக்கள் எழுச்சி, புரட்சிக்கு முன் பணபலம், ஆள்பலம் தூள் தூளாகும். தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேண்டும். பதவி மீது ஆசையில்லாதவர்களே எனக்கு வேண்டும்” எனவும் குறிப்பிட்டார் ரஜினி.
”மறைந்த தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் வரத்தேவையில்லை. கட்சியிலிருப்பவர்கள் வந்தால் போதும். இதுதான் மாற்று அரசியல். எம்.எல்.ஏ, எம்.பியாக ஒருவரை ஆக்கி "அழகு பார்ப்பது என்பது அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை". தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன். தொண்டர்கள் சொல்வதை கேட்பவன் தலைவனல்ல அரசியலில் பணம், பதவி, பெயருக்கு நான் வரவில்லை என 2017 டிசம்பரிலேயே கூறிவிட்டேன். நல்ல தலைவர்களை உண்டாக்குபவர்களே நல்ல தலைவர்கள். எனக்கு பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணா” ரஜினிகாந்த் பேச்சு
”தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் எலலொரும் 50 வயதுக்கு மேலானவர்களே. 60 முதல் 65 சதவீதம் எனது கட்சியில் 50 வயதுக்கு கீழுள்ளோரை வாய்ப்பு கொடுப்பேன். மீதமுள்ள 30 முதல் 35% மாற்றுக்கட்சியிலிருந்து வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு வாய்ப்பு தருவேன். ஓய்வுபெற்ற நீதிபதிள் உள்ளிட்டோரை நானே நேரடியாக அவரகள் இல்லம் சென்று சிஸ்டத்தை சரிசெய்ய அழைப்பேன். கட்சி வேறு, ஆட்சி வேறு என்ற அடிப்படையில் தலைமையை நிர்ணயிப்பேன். எனக்கு ஆட்சி தலைமை தேவையில்லை. இதுவரை நான் முதலைமைச்சர் பதவியை நினைத்து பார்த்ததேயில்லை. நான் கட்சித்தலைவராகவே இருந்து நல்ல இளைஞனை ஆட்சிக்கு தலைவனாக தேர்ந்தெடுப்பேன்” என்றும் ரஜினி தனது பிரஸ் மீட்டில் குறிப்பிட்டார்.
2 பெரிய ஆளுமைகள் இல்லாம இங்க வெற்றிடம் உருவாகியிருக்கு. இதான் சரியான நேரம், 54 வருஷமா நடந்திட்டு இருக்க ஆட்சியை அகற்ற இதுதான் நமக்கு சரியான நேரம்.
1996 ல் எனக்கு வந்த வாய்ப்பை நான் ஏற்கவில்லை. அரசியலுக்கு வருகிறேன் என 2017 டிசம்பருக்கு முன்பு நான் சொன்னதில்லை. 1996ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக நான் சொன்னதாக சொல்வது தவறு.
ஜெ மறைவுக்கு பின் அரசியலில் நிலைத்தன்மை இல்லாத சூழலில், என்னை வாழவைத்த மக்களுக்காக நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். திமுக, அதிமுக 50 ஆயிரத்துக்கும் மேலாக கட்சி பதவிகள் உள்ளது. அது தேர்தல் நேரத்திற்கு மட்டுமே தேவை. தேர்தலுக்கு பின் அவை தேவையில்லை. தனது கட்சி ஆட்சிக்கு வந்த பின் தான் ஆளுங்கட்சி ஆள் என்ற அடிப்படையில் டென்டரில் இருந்து எல்லா விதத்திலும் ஊழலுக்கு வழிவகுப்பர். நான் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்ததும், தேர்தல் நேரத்தில் என்ன பதவி தேவையோ அதை மட்டுமே தொண்டர்களுக்கு கொடுப்பேன். இதுதான் நான் அரசியலுக்கு வந்த செய்யவுள்ள மாற்றம்.
முதல்வர் பதவி நான் வேணாம்ன்னு சொல்லி தியாகம் பண்றதாகவும், இது என்னுடைய அரசியல் ஸ்டண்ட் எனவும் சிலர் நினைக்கலாம். ஆனால் இதனை நான் 2017-லேயே சொல்லியிருக்கிறேன்.
அரசியலில் அழகுப் பார்ப்பது என்று கூறுவது எனக்குப் பிடிக்காத விஷயம். அரசியல் நடவடிக்கைகளுக்காக மூத்த தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரிடமும் ஆலோசனை நடத்தினேன்.
கட்சியில் நான் தலைவர் மட்டுமே. சி.எம் ஆக சட்டமன்றத்தில் உட்காருவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆகையால் எனக்கு முதல்வராக ஆசையில்லை என ரஜினி அறிவிப்பு
”சிஸ்டம் கெட்டுப் போயிருக்கிறது என இளைஞர்களின் வீட்டுக் கதவை தட்டி கூப்பிட்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் போகிறேன். 50 வயதுக்குள் அந்தத்த ஏரியாவில் இருக்கும் நல்லவர்களுக்கு வாய்ப்பு. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஜட்ஜ் போன்ற மக்களுக்கு சேவை செய்ய காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு என பிரித்து எம்.எல்.ஏ சீட்கள் ஒதுக்கப்படும்”
ரஜினியின் பேட்டியை நேரலையில் பார்க்க
”கடந்த முறை நடந்த சந்திப்பில் ஒரு விஷயத்தில் எனக்கு ஏமாற்றம் அளித்தது எனக் கூறியிருந்தேன். ஆனால் அதைப்பற்றி மாவட்ட நிர்வாகிகள் யாரும் வெளியில் சொல்லவில்லை. அவர்களுக்கு எனது பாராட்டுகள். நான் 2017-ல் தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன். ஆனால் 96-ல் நான் அது குறித்து சொல்லவில்லை”
தனது சந்திப்பை நேரடியாகப் பார்க்க லைல் லிங்கை தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் நடிகர் ரஜினி
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்திக்க பிரத்தியேக அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க வாய்ப்பு
மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, லீலா பேலஸுக்கு கிளம்பினார் ரஜினி. இந்த அதிகாரப்பூர்வ சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தவாரம் நடைபெற்ற கூட்டத்தில் "கட்சி வேறு; ஆட்சி வேறு. 48 வயதுக்கு உட்பட்டவருக்கே கட்சியில் முக்கிய பொறுப்பு. தனக்கு முதல்வர் நாற்காலியில் அமர ஆசை இல்லை!’’ என்றுதெரிவித்தார் ரஜினி. இந்நிலையில் இன்று நடக்கும் சந்திப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது