ரஜினியின் கட்சி பெயர்.. சின்னம்.. வேகமாகும் பரவும் தகவல்! உண்மை என்ன?

ரஜினிக்கு நெருக்கமானவர்களின் பெயர்களே பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

rajinikanth party super star rajinikanth political party
rajinikanth party super star rajinikanth political party

rajinikanth party super star rajinikanth political party : நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

234 தொகுதிகளிலும் நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வரும் டிச.,31ல் வெளியிடப்படும் எனவும் ரஜினி உறுதியாக கூறினார். மேலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிய ரஜினி, கட்சிக்காக சில பெயர்களை பரிசீலனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினி, ‛மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி, ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளதாகவும், ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இ்நதிய தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ரஜினிக்கு நெருக்கமானவர்களின் பெயர்களே பொறுப்புகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள சின்னங்கள் குறித்த தகவல் நேற்று வெளியானது. அதன்படி ரஜினியின் கட்சியாக கூறப்படும் மக்கள் சேவை கட்சிக்கு 234 தொகுதிகளிலும் ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி ரஜினி இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth party super star rajinikanth political party rajini election symbol rajini party name

Next Story
மீண்டும் நீட் மோசடி: டாக்டர் மகள் சிக்கினார்Chennai Girl Forges Neet Scorecard to get Medical Seat Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com