ரஜினிகாந்த் வெறுப்பு அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும், அதிமுக, திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் செய்ய மாட்டார் என்று தமிழருவி மணியன் தெரிவித்தர்.
Advertisment
ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் செய்தியார்களிடம் பேசுகையில், "கட்சியின் அடிப்படை கட்டுமானங்கள் குறித்தும், செயல் திட்டங்கள் குறித்தும் ரஜினியிடம் பேசியிருக்கிறோம். ரஜினி கட்சியைத் தொடங்கிய அடுத்த கணமே, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும்பாலான வாக்காளர்கள் இயல்பாகவே அவருக்கு பின்னால் வந்து நிற்க கூடிய சூழல் கனிந்து விடும். ஒரு பேர் எழுச்சியை தமிழ்நாட்டு நிச்சயம் சந்திக்கப் போகிறது. பேர் எழுச்சி உருவாகக் கூடிய நிலையில் ரஜினி கூட்டணி குறித்து முடிவு செய்வார் " என்று தெரிவித்தார்.
ரஜினி அரசியலில் போட்டியிடுவரா? போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை தன்னால் தெரிவிக்க முடியாது என்று கூறிய தமிழருவி மணியன் , " ரஜினிகாந்த் வெறுப்பு அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும், அதிமுக, திமுகவை விமர்சித்து ரஜினி அரசியல் செய்ய மாட்டார் என்றும் தெரிவித்தார்.
ரஜினியின் ஆன்மீக அரசியல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது என்று கூறிய அவர், "ஆன்மீகத்திற்கு மதமே கிடையாது. உலகத்து உயிர்கள் அனைத்திலும் தன்னை காண்பதும், உலகத்து உயிர்கள் அனைத்தையும் தன்னுள் காண்பதுமாக எவன் இருக்கிறானே அவன் தான் ஆன்மீகவாதி. அனைத்து மக்களயையும் அன்பினால் ஆரத்தழுவி கொள்வது தான் ஆன்மிகம். அதைத் தான் ரஜினி செய்யப் போகிறார்" என்று குறிபிட்டார்.