மதுரை எம்.பி சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நூல் 1 லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாவதையொட்டி வெற்றிப் பெருவிழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (11.07.2025) நடைபெற்றது.
'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், “அனுபவசாலிகள் இல்லாமல் எந்த இயக்கமும், கட்சியும் தேறாது” என்று பேசியுள்ளார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: “அப்போது பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அப்போது நான் ‘பழைய ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்’ என்று கூறியிருந்தேன். அதே சமயம், ‘அப்படியிருந்தாலும் பழைய ஸ்டூடண்டுக்கு தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவம் அதிகம் கொண்டவர்கள்.
அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட’ என்றும் சொல்லலாம் என இருந்தேன். ஆனால், அதை மறந்துவிட்டேன். அதனால், இந்த முறை வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன்.
சிவகுமார், கமல்ஹாசனை கூப்பிடாமல், 75 வயதிலும், கூலிங் க்ளாஸ் போட்டு, ஸ்லோமோஷனில் நடந்துவரும் என்ன கூப்பிட்டுள்ளார்கள் என நினைப்பார்கள். அதனால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.” என்று கூறினார்.
தனக்குப் பிடித்த எழுத்தாளர் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். பிரமாணர்கள் குறித்து அவர் கதை எழுதினாள் அங்கே தான் பிறந்தாரோ என தோன்றும். அந்த அளவுக்கு எழுதுவார். யாருக்காக அழுதான் புத்தகத்தை படித்து 3 நிமிடம் அவருக்காக அழுதேன். வந்தார்கள் வென்றார்கள் படித்தால் கண்களில் ரத்தம் வரும்” என்று பேசினார்.
விழாவில் தொடர்ந்து பேசிய விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி.. அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஹேட்ஸ் ஆஃப்.. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்” என்று உருக்கமாகக் கூறினார்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், தனது அடுத்த கனவுப் படம் குறித்து பேசுகையில், “எழுத்தாளர் சு. வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவல் வெற்றிப் பெருவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர், "எந்திரன் என்னுடைய கனவுப் படமாக இருந்தது. தற்போது 'வேள்பாரி' கனவுப் படமாக இருக்கிறது" என்று கூறினார்.
இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்த சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.